இஸ்ரேல் குண்டு வீச்சில் பலியான பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை

ஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா., அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் ஒருபுறம் வலியுறுத்தினாலும் தாக்குதல் நின்றபாடில்லை. 
இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வரும் ஹமாஸ் போராளிகளை அழிக்க காசா மீது இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழித் தாக்குதலும் நடந்து வருகிறது. 

18-வது நாளான நேற்று காசாவின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் தாக்குதலை தொடர்ந்தன. இரு தரப்பு மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850-ஐ நெருங்கி விட்டது. 

இந்நிலையில், மத்திய காசாவின் டெயிட் அல்-பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் நேற்று நடத்திய குண்டு வீச்சில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 23 வயது நிறைமாத கர்ப்பிணி பலியானார். 

எனினும், சிசேரியன் ஆபரேசன் மூலம் அவரது வயிற்றில் இருந்த பெண் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.  இன்னும் பெயரிடப்படாத அந்த குழந்தை உயிர் வாழ்வதற்கான 50 சதவீத சாத்தியக் கூறுகள் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு டாக்டர் இந்த கொடூரத்தை எண்ணி கொதித்துப் போய் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :