எரிந்து கொலை செய்யப்பட்ட நபரின் பின்னனி வெளிவந்தது (விபரம் இணைப்பு)

அநுராதபுரம், அசரிக்கம சம்பவம்:

கடந்த ஞாயிற்றுக்கிழ­மை­ வெயில் உச்சம் கொடுப்­ப­தற்குமுன்னர் ராவுத்தர் ஆதம்­பாவா தனது விவ­சாய நிலத்தைப் பார்ப்­ப­தற்­காக தனதுசைக்­கிளில் ப­யணத்தைத் தொடர்ந்தார்.

அநு­ரா­த­புரம, முஸ்லிம் கட்­டுக்­க­லி­யா­வ­யி­லுள்ள தனது வீட்­டி­லி­ருந்து அச­ரிக்­க­மையை அண்­மித்த பிர­தே­சத்தில் அமைந்­துள்ள விவ­சாய நிலத்தை நோக்­கி­ய­தா­கவே அவ­ரது பயணம் தொடர்ந்­தது. பெரி­ய­ளவில் மனித சஞ்­சாரம் அற்ற வனாந்­தரம்நிறைந்த அந்த ஒற்றை­யடிப் பாதை­யி­லான அவரது பயணம் அன்று வழ­மைக்கு மாறானகாட்­சியை முன்­னி­றுத்­தி­யது.

ஒற்­றை­ய­டிப் ­பா­தையில் பாதணிச் சோடி­யொன்றும் இரத்தக் கறையும் இருந்­தது. அதனைக் கண்டு சல­னப்­பட்ட ராவுத்தர் ஆதம்­பாவா சைக்­கி­ளி­லிருந்து இறங்கி சற்று தூரம் கால் நடை­யாகத் தொடர்ந்தார். கால்­நடைப் பய­ணத்தின் குறு­கிய நேரத்தில் அவர் கண்ட காட்சிஅவரை நிலை­கு­லைய வைத்­தது.

அங்கு நெருப்பு கொழுந்து விட்­டெ­ரிந்து கொண்­டி­ருந்­தது.தன்னை சற்றுசுதா­க­ரித்­துக்­கொண்டு அவ­தா­னித்­த­போது அந்த தீச்­சு­வா­லையில் நபர் ஒருவரின் தலைக்கவசம்(ஹெல்மட்) அணிந்த தலை எரிந்­து­கொண்­டி­ருப்­பதுகண்­க­ளுக்­குப்புலப்­பட்­டது.அங்கு ஏதோ ஓர் அசம்­பா­விதம் நடைபெற்றி­ருப்­பதை உணர்ந்த அவர் உட­ன­டி­யாக அங்­கி­ருந்து விரைந்துதனது வீடு நோக்கிப் புறப்­பட்டார்.

பின்னர் பிர­தே­சத்­தி­லுள்ள கிராம சேவ­க­ருக்கு தகவல்வழங்­கினார்.தொடர்ந்து கிராம சேவ­கரும் பிர­தேச வாசிகள் சிலரும் குறித்த இடத்தை மு.ப 10.45 மணி­ய­ளவில் அடைந்து அநு­ரா­த­புரம் பொலி­ஸா­ருக்கும் தகவல் வழங்­கினர். அங்கு மோட்டார் சைக்­கி­ளோடு நபர் ஒருவர் அடை­யாளம் தெரியா வண்ணம் தீயில் கரு­கி­யி­ருந்தார்.

சற்று நேரத்தில் பிர­தே­ச­வா­சிகள் குறித்தஇடத்தை மொய்த்து விட்­டனர். கொலை செய்­யப்­பட்டு எரிக்­கப்­பட்­டவர் யாரெனஅடை­யாளம் காண முடியா­வி­டினும் அவர் அணிந்­தி­ருப்­பது சிவில்பாது­காப்பு பிரி­வினர் வெளிக்­களப் பணி­யின்­போது அணிந்­தி­ருக்கும்சீருடை என்­பதும் அந்த மோட்டார் சைக்கில் ‘தபால் 90′ வகையைச்சேர்ந்­த­தென்­பதும் தெரிய வந்­தது.

அநு­ரா­த­புரம் மாவட்­டத்தின் மேற்கு தேர்தல் தொகு­தியில் அமைந்­துள்ளஅச­ரிக்­கம கிரா­மத்தின் அலி­வெட்­டு­னு­வெவ பிர­தே­சத்தின் பிர­தான பாதையி­லி­ருந்து சுமாந் 200 மீற்றர் தொலை­வி­லேயே இந்த கொலைக் இடம்­பெற்­றி­ருந்­த­து. ஆகை­யினால் அச­ரிக்­கம கிரா­மத்­தி­லி­ருந்து அநு­ராதபுரம் நோக்கி ‘தபால் 90′ வகை மோட்டார் சைக்­கிளில் சிவில்பாது­காப்பு கட­மைக்குச் செல்லும் ஒரு­வ­ரா­கத்தான் இருக்கும் என சம்­பவ இடத்தில் கூடிய பிர­தே­ச­வா­சிகள் ஊகித்­தனர்.

குறித்த அடை­யாளம்உள்­ள­வர்­களை விசா­ரித்­தனர். அதில் முஹமட் இஷாக்கும் ஒருவர். உட­ன­டி­யாக இஷாகின் மனை­விக்கு தொலை­பேசி அழைப்பு ஏற்­ப­டுத்தி கணவர் பற்றி விசா­ரித்­தனர். தனது கணவர் “இன்று காலை தொழில் நிமித்தம் புறப்­பட்­டுள்­ள­தா­கவும் தற்­போது அவரின் தொலை­பேசி செய­லி­ழந்­துள்­ள­தா­கவும்” அவர் குறிப்­பிட்டார். அதனைத் தொடர்ந்துஇஷாக்கின் மாமனார் (மனை­வியின் தந்தை) சம்­பவ இடத்திற்கு

வர­வ­ழைக்­கப்­பட்டார்.அங்கு வந்த மாமனார் அது தனது மரு­ம­க­னான இஷாக்கின் சட­லம்தான் என்­பதை உறுதி செய்தார். சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸ் குழு­வொன்று பல கோணங்­களில் விசா­ரணைகளை முடுக்­கி­விட்­டது. குறித்த நபர் அன்று காலை தொழில் நிமித்தம் வீட்­டி­லிருந்து புறப்­பட்­டுள்ளார்.

அத்­தோடு ஒரு தொகைப் பணத்­தையும் கொண்டுசென்­றுள்ளார் .பிர­தான பாதை­யி­லி­ருந்து உள் நோக்கிச் செல்லும் ஒற்­றை­ய­டிப்­ பா­தைக்கு குறித்த நபரை வர­வ­ழைத்து தாக்கி கொலை செய்­துள்­ளனர். அந்த இடத்தில் ஏரா­ள­மான இரத்தக் கறைபடிந்­துள்­ளது. பின்னர் அங்­கி­ருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்­கி­ளோடு சேர்த்து எரித்­துள்­ள­தாக பொலிஸார் முதற்­கட்ட விசா­ணை­க­ளி­லி­ருந்து தெரி­வித்­தனர்.

அத்­துடன் சந்­தேக நபர் ஒரு­வ­ரையும் இனம் கண்­டனர். அவர்அச­ரிக்­க­மைக்கு பக்­கத்துக் கிரா­ம­மான கம்­பி­ரி­கஸ்­வெ­வயைச் சேர்ந்­தவர். உட­ன­டி­யாக அந்த சந்­தேகநபரைத் தேடி பொலிஸார் வலைவீசினர். எனினும் அவர் வீட்டில் இருக்­க­வில்லை. புத்­தளம் சென்­றுள்­ள­தாகதெரிய வர பொலிஸ் குழு சந்­தேக நப­ரைத்­ தேடி புத்­தளம் நோக்கி விரைந்­த­து.

மேலும் மற்­று­மொரு பொலிஸ் குழு சம்­பவ இடத்­திற்கு விரைந்து பொலிஸ்மோப்ப நாயின் உத­வி­யுடன் விசா­ர­ணை­களைத் தொடங்­கி­யது. மோப்ப நாயின் உத­வி­யுடன் குறித்த சந்­தேக நபரின் வீட்­டி­லி­ருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் இரத்தக் கறை படிந்த ஆடையும் கண்­டெ­டுக்­கப்­பட்­டது. சம்­பவ இடத்­திற்கு நீதிவான் வருகைதந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பின்னர் சடலம் பிரேதப் பரி­சோ­த­னைக்­காக அநு­ரா­த­புரம் பொது வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டுசெல்­லப்­பட்­டது. இதற்­கி­டையில் அன்று மாலை குறித்த சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­தனர்.

எதற்­காக கொலை நடை­பெற்­றி­ருக்­கலாம்?

கொலைசெய்­யப்­பட்ட நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான 39 வய­தான இஷாக்கும் (14 வயதில் ஆண் பிள்ளை ஒரு­வரும், 11,8,1 வயதில் மூன்று பெண் பிள்­ளை­களும்) கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபரும் நண்­பர்கள். இவர்கள் அடிக்­கடி சந்­தித்­து பேசு­ப­வர்கள்.இஷா­க்கிற்கு சந்­தேக நபர் பணம் கொடுக்கவேண்­டி­யி­ருந்­தது.

சம்­பவ தினத்­திற்கு அண்­மைய நாட்­களில் இரு­வரும் சந்­தித்­துள்ளார்.அந்த சந்­திப்பின் போது “தனக்கு பணம்தேவைப்­ப­டு­வ­தா­கவும் ஆகவே தனக்கு தர வேண்­டிய பணத்தை தரு­மாறும்” இஷாக் கேட்­டுள்ளார். அப்­ப­ணத்தை “ஞாயிற்றுக் கிழமை காலை தான் தரு­வ­தா­கவும், அதனை தனது வீட்­டுக்கு வந்து பெற்றுக் கொள்­ளு­மாறும்” சந்­தேக நபர்இஷா­க்கிடம் கூறி­யுள்ளார்.

சம்­பவ தினம் காலையில் இஷாக் தனது வயல் நிலத்­திற்குச் சென்று நீர்பாய்ச்­சி­விட்டு தனது கட­மைக்­காகப் புறப்­பட்டுள்ளார். அத்­துடன் தான்கொள்­வ­னவு செய்­துள்ள நான்கு சக்­கர உழவு இயந்­தி­ரத்­திற்கு தவ­ணைக்­ கட்­டணம் செலுத்­து­வ­தற்­கென ஒரு இலட்­சத்து அறு­ப­தா­யிரம் ரூபா பணத்­தையும் எடுத்துக் கொண்டு சென்­றுள்ளார். (தவ­ணைக் ­கட்­ட­ண­மாக இரண்டு இலட்சம் ரூபா செலுத்த இருந்த நிலையில், இந்த ஒரு இலட்­சத்துஅறு­ப­தா­யிரம் ரூபா­வுடன் சந்­தேக நபர் கொடுக்கும் நாற்­ப­தா­யிரம்ரூபாவும்)

எனவே இஷாக் தனது பயணத்தின் இடையில் சந்­தேக நபரைச் சந்­தித்தவேளை­யிலே இந்தக் கொலை நடை­பெற்­றி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கின்­றனர்.

அடுத்த நாள்…


கடந்த திங்கட்கிழமை பிரேத பரி­சோ­த­னையின் பின்னர் ஜனாஸா முத்­தி­ரை­யி­டப்­பட்டு உற­வி­னர்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.அன்று மாலை 4.30 மணி­ய­ள­வில அச­ரிக்­கம மைய­வா­டியில் ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. அதே­வேளை கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் பொலிஸாரால் குறித்த பிர­தே­சத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்டு அவரின் தக­வ­லின்­படி மர­ணித்­த­வரின் தொலை­பேசி கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

அந்த தொலை­பேசி எரிக்­கப்­பட்டு நிலத்தில் புதைக்­கப்­பட்ட நிலை­யி­லேயே மீட்­கப்­பட்­டது. சந்­தேகநபரை பிர­தே­சத்­திற்கு பொலிஸார் அழைத்து வந்தவேளை பிர­தே­சத்தில் சிறு சல­ச­லப்பு ஏற்­பட்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. எனினும் குறித்த கொலைக்கு வேறு பின்­னணி உள்­ளதா? தனி­நபர் ஒருவர் இந்த கொலையைச் செய்தாரா? கொலையின் பின்னணியில் இன்னும் வேறு யாரும்உள்ளனரா? என பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும் சம்பவம் நடைபெற்ற அசரிக்கம பிரதேசமானது போக்குவரத்து வசதிகள் குறைந்த பிரதேசமாகும். அத்துடன் அந்த வனப் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசமும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ஆதலால் அத்தியவசியத் தேவைகளுக்காகவே அப்பிரதேசத்தவர்கள் இரவு நேரப் பயணங்களை மேற்கொள்கின்றனர். இது இவ்வாறிருக்க பட்டப் பகலில் நடந்திருக்கும் குறித்த கொலைச் சம்பவத்தினால் பிரதேசவாசிகள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

நன்றி-விடிவெள்ளி/ம.நி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :