உம்றாக் கடமையை நிறைவேற்றச்செல்கிறோம் என்று ISIS அமைப்பில் சேர்ந்த மும்பை இளைஞர்கள்

ராக்கின் மொசுல் நகரை கைப்பற்றி புதிய ஆட்சி அமைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் படையில் மும்பையை சேர்ந்த 4 வாலிபர்கள் இணைந்துள்ள தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் மும்பையில் இருக்கும் தனது தந்தைக்கு போன் செய்து, நானும் எனது நண்பர்கள் 3 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர்ந்து விட்டதாகவும், சிரியாவில் உள்ள ரக்கா மாகாணத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் இறுதியில் மும்பையில் இருந்து சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாட்டில் உள்ள இஸ்லாமிய புனித தலங்களுக்கு ‘உம்ரா’ செய்யச் சென்ற 30 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றிருந்த ஆரிப் மஜீத், சலீம் தன்கி, அமான் தண்டல், பஹாத் ஷேக் ஆகியோர் ஈராக்கில் திடீரென்று காணாமல் போயினர்.

இவர்கள் கார் மூலம் ஈராக்கின் மொசுல் நகருக்கு சென்று அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர்ந்து விட்டுள்ளனர். தற்போது சிரியாவின் ரக்கா மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்த 4 பேரும் இரு குழுக்களில் இணைந்து போரிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

இவர்களை தானேவில் உள்ள ஒரு பிரபல தொழிலதிபர் ‘மூளைச் சலவை’ செய்து, நிதி உதவியும் செய்து ஈராக்குக்கு ‘உம்ரா’ என்ற போர்வையில் அனுப்பி வைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இவர்களில் தனது தந்தையுடன் போனில் பேசிய ஆரிப், சிரியாவில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாங்கள் செய்யும் ‘வேலையினால்’ தங்களது ஒட்டு மொத்த குடும்பத்துக்குமே சொர்க்கத்தில் இடம் கிடைத்து விடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :