அஷ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கடந்த வாரம் புனித மக்காவுக்கு உம்ராவுக்குச் சென்றதை வைத்து இன்றைய ஞயிறு சிங்களப்பத்திரிகையான தேசிய' முன்பக்கத்தில் தலைப்புச் செய்தியாக ஹக்கீமின் படத்தை பிரசுரித்து பின்வரும் செய்தியை வெளியீட்டுள்ளது.
அச் செய்தியில் தலைப்பு 'ஹக்கீமின் அடுத்ததொரு குண்டு' கடந்த வாரம் ஹக்கீமும் அவரது குழுவும் சவுதி அரேபியாவில் ஜித்தாவுக்குச் சென்று உலக இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் அங்கு அவர்கள் இலங்கை வாழும் முஸ்லீம்களுக்கு நடைபெறும் பிரச்சினைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பித்ததாகவும். அப்பத்திரிகை சுட்டிகாட்டியுள்ளது.
அச் செய்தியில் மேலும் கடந்தவாரமும் அரசுக்கு எதிராகவும் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற என்ற அறிக்கையையும் இவ்வாறுதான் முஸ்லீம் காங்கிரஸ் ஜக்கிய நாடுகள் மணித உரிமை ஆணையாளரிடமும் நவநீதம்பிள்ளையிடம் சமர்ப்பித்தாகவும் அதேபோன்று இன்னொரு அறிக்கையை தற்பொழுது அரபு உலகத்திற்கு ஹக்கீம் சமர்ப்பித்துள்ளாஎன அச் செய்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment