ஈராக்கில் மிகப் பழமையான ஜோனாஹ் சமாதி தூபியைக் குண்டு வைத்துத் தகர்த்தனர் ISIS போராளிகள்



ராக்கில் 1393 ஆம் ஆண்டளவில் இறை தூதர் யூனிஸ் ஐ அடக்கம் செய்து கட்டப் பட்ட சமாதி மோசுலில் உள்ளது. பைபிளில் கூறப்பட்டுள்ள ஜோனாஹ் எனும் இறைத் தூதரும் யூனிஸ் ஐத் தான் குறிப்பதாக நம்பிக்கையும் உள்ளது.

இந்த சமாதி தூபியை நேற்று வியாழக்கிழமை ISIS போராளிகள் வெடி வைத்துத் தகர்த்துள்ளனர். இதைப் படம் பிடித்த வீடியோவும் YouTube இல் வெளியாகியுள்ளது.

ஒரு சுன்னி பள்ளி வாசலுக்கு உள்ளே இந்த தூபி அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான எந்த ஞாபகார்த்த தூபிகளும் அழிக்கப் படும் எனவும் ISIS சூளுரைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக இது போன்ற பல பண்டைய புனித தலங்களை ISIS அழித்து வந்துள்ளது. கடந்த மாதம் ஷைட்டிக்களின் டல் அஃபார் நகரில் அமைந்துள்ள 7 புனித தலங்களை இப்போராளிகள் அழித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. ஈராக்கில் நேற்றைய தினம் அரச ஜெட் விமானங்கள் அல் டுபாட் பகுதியில் குண்டு வீசியதில் 8 பேர் கொல்லப் பட்டிருந்ததுடன் மத்திய பக்தாத்தின் சந்தடி மிக்க கர்ராடா மாவட்டத்தில் இரட்டைக் கார்க் குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப் பட்டும் 14 பேர் காயம் அடைந்தும் இருந்தனர்.

மேலும் ஈராக்கின் சட்ட வல்லுனர்கள் ஃபுவட் மஷும் என்பவரை அந்நாட்டின் அடுத்த அதிபராகவும் நேற்றைய தினமே தேர்ந்தெடுத்து இருந்தனர். இதேவேளை ISIS தீவிரவாதிகள் தமடு கட்டுப்பாட்டிலுள்ள நகரில் வசிக்கும் 11 இலிருந்து 46 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் Fatwa என்ற கட்டளையை இட்டிருப்பதாகவும் இதனால் இலட்சக் கணக்கான பெண்கள் பாதிக்கப் படவுள்ளனர் என்றும் ஐ.நா சபை கவலை தெரிவித்திருந்தது. ஆனால் பின்னர் அரசியல் நிபுணர்கள் இச்செய்தி வதந்தி என அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :