-எம்.வை.அமீர்-
எதிர்வரும் 17ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு முன்னோடி பயிற்சி கருத்தரங்கு இன்று (2014-07-26) தென்கிழக்கு பல்கலைக்கழக சம்மாந்துறையில் அமைந்திருக்கும் பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சமூக மற்றும் பல்கலாச்சார அமைப்பின் (சமா) ஏற்பாட்டில், சுடர்ஒளி பத்திரிக்கையின் அனுசரணையுடன், சுடர்ஒளி புலமைச்சுடர் ஆசிரியர் திரு.ரீ.திலீப்குமார் அவர்களின் விரிவான இலகு விளக்கங்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் சமா அமைப்பின் இஸ்தாபகருமான கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வுக்கு சுடர்ஒளி பத்திரிக்கையின் சார்பில் அப்பத்திரிகையின் கணக்காளர் கே.சதீஸ்குமார் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வின் ஆரம்பத்தில் பெற்றோர்களின் சார்பில் பிரபல ஊடகவியலாளர் மௌலான அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இங்கு உரையாற்றிய உபவேந்தரும் சமா அமைப்பின் இஸ்தாபகருமான கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் சுமார் 300க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு குறித்த பரீட்சையை இலகுவாக எவ்வாறு முகம்கொடுப்பது என்ற கேள்விக்கு சுடர்ஒளி பத்திரிக்கையின் சார்பில் விளக்கமளிக்க வந்திருக்கும் சுடர்ஒளி பத்திரிக்கையின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அவர்களது இவ்வாறான முயற்சிகளையும் பாராட்டினார். மாணவர்கள் தங்களது பரீட்சைக்கான சந்தேகங்களை இங்கு கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மண்டபம் நிறைந்து காணப்பட்ட மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் இங்கு வந்திருந்ததும் அதேவேளை இப்பிராந்திய தமிழ் முஸ்லிம் மாணவர்கள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment