இதேவேளை காஸாவில் ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஐ.நா செயலாளர் உட்பட பல இராஜத்தந்திரிகள் முயற்சி செய்து வருகின்றனர். காஸாவில் போர்நிநிறுத்தமொன்றை மேற்கொள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி விடுத்த அழைப்பை இஸ்ரேல் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் காஸாவில் நிரந்தர போர்நிறுத்தமொன்றை மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளதாக ஜோன் கெர்ரி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாளை முன்னிட்டு போர்நிநிறுத்தத்தை கடைபிடிக்குமாறு ஐ. நாவின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் கோரி்க்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது வரை இஸ்ரேலின் ஷெல் மற்றும் வான் தாக்குதல்களில் 800க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது. நேற்றைய இஸ்ரேலின் தாக்குதல்களில் 55 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸின் தாக்குதலிகளில் 36 இஸ்லேயர்கள் கொல்லப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க இராஸாங்க செயலாளர் உட்பட பல முக்கிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்று பிரான்ஸில் காஸா மோதல்கள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

0 comments :
Post a Comment