ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிலுநர் ஆசிரியர்கள் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பயிலுநர் ஆசிரியர்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்த ஏழு பேர் கொட்டகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
கல்வியியற் கல்லூரியின் உணவகத்தில் நேற்றிரவு இரவு உணவு வேளையின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பயிலுநர் ஆசிரியர் ஒருவரிடம் நேற்றிரவு வாக்குமூலம் பதிவுசெய்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
.jpg)
0 comments :
Post a Comment