இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கப்போவதில்லை - அரசாங்கம் அறிவிப்பு

முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்கவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இஸ்ரேலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வடக்கில் மேற்கொள்ளப்படுவதாக தயான் ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம் என இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். தயான் ஜயதிலக்க 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைசச்ர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டப் பிரதிநிதிகள் 2008 மற்றும் 2009ம் ஆண்டு இஸ்ரேலுக்கு விஜயம் செய்து, அந்நாட்டு சுதேசப்பாதுகாப்புப் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், சுதேசப்பாதுகாப்புப் படை முன்வைத்த யோசனையை சம்பிக்க தரப்பினர் ஏற்றுக்கொண்டதாகவும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். தயான் ஜயதிலக்கவின் கோரிக்கைகளை ஏற்கப் போவதில்லை எனவும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
jm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :