இளைஞர் பாரளுமன்றத்தின் 9ஆவது அமர்வு இன்று

ளைஞர் பாரளுமன்றத்தின் 9ஆவது அமர்வு இன்று (26) ஆரம்பமாகவுள்ளது.சிறிலங்கா யூத் பிரதான கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் இவ்வமர்வு நாளையும் (27) தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இளைஞர் பாரளுமன்றத்தின் 9ஆவது அமர்வில் கல்விச்சீர்த்திருத்தம்- தொழிலின்மை- சுயதொழிலாளர்களின் அபிவிருத்தி- அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண சேவைகள்- சுற்றாடல் மீளமைத்தல்- சுகாதாரம்- பெண்களை வலுப்படுத்தல்- சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு- வெளிநாட்டு வேலைவாய்ப்பு- மீன்பிடி மற்றும் விவசாயம்- கைத்தொழில்- இனங்குக்கிடையிலான சமய நல்லிணக்கம் மற்றும் ஆட்சிமுறைமை- சமூக நீதி- அரசாங்க கொள்கைகள் வகுக்கக்கப்படும் போது இளைஞர் கொள்கைகள் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பான பங்களிப்பு என்பன தொடர்பாக தலைப்புக்களின் கீழ் விவாதங்கள் நடத்தப்படவுள்ளன.

26ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆரம்ப அமர்வில் பிரதான விருந்தினராக இளைஞர் சேவைகள் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெருமவும் சிறப்பு அதிதியாக நீதியரசர் பாலித்த பெர்ணாண்டோவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வமர்வில் இளைஞர் சேவைகள் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி. விஜயரத்ன- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் பணிப்பாளர் சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :