ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி
பிரிவினையைஏற்படுத்தமுனையும் தீயசக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்குஎல்லாம் வல்ல இறைவனை இந்நன்நாளில் பிரார்த்திப்போமாக.
அல்லாஹூத்தஆலாவின் அருள் நிறைய வேகிடைக்கப்பெறுவதுவும்,பாவமன்னிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுவதுமானமாதம் ரமழான் மாதமாகும். இதனால் கடந்துசென்றமாதத்தில் இந்நாட்டில் மாத்திரமன்றிஉலகம் முழுவதுவும் செறிந்துவாழும் முஸ்லிம் உடன்பிறப்புகள் நோன்புநோற்று இராப்பகலாகநின்றுவணங்கிஅல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடியும் அல்லாஹ்வின் அருளைவேண்டியும் செயற்பட்டனர்.இதுவழமையானது. ஆனால் 2014 ஆம் ஆண்டின் றமழான் மாதம் இலங்கை முஸ்லிம்களைஒருபடிமேலும் உயர்த்தும் தியாகப் பயிற்சியைக் கொடுத்திருக்கின்றது. அதிலும் அவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் அம்மக்கள் இன்றையதினம் ஈதுல்பித்ர் ஈகைத்திருநாளைக் கொண்டாடிஅல்லாஹ்வுக்குசுக்ர் செய்கின்றனர். அம்மக்களுக்காய் எனதுஉளம் கனிந்தநோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்வதில் மனநிறைவும் மட்டில்லாமகிழ்ச்சியும் அடைகின்றேன். எல்லாம் வல்லஅல்லாஹ்வையும் புகழ்கின்றேன்.
ஒருஅசாதாரணசமூக சூழ்நிலைகாணப்படும் போதுஎவ்வாறுபொறுமைகாக்கவேண்டும்,அதன் மூலம் வெற்றிகாணவேண்டும் என்பதை இஸ்லாம் அழகுறஎடுத்துக் காட்டியுள்ளது. யுத்த சூழ்நிலையில் காசாவில் உள்ளஎமது முஸ்லிம் சகோதரர்கள் நோன்புநோற்பதற்கும்,அதனைத் திறப்பதற்கும் அடிப்படைவசதியற்றுதவிக்கும் சோகம் கொடியது.
இதேபோல இனரீதியானவன்முறைகள் முடுக்கிவிடப்பட்டபோதுஎமதுபேருவளை,அளுத்கம,அதனைச் சூழவுள்ள முஸ்லிம் சகோதரர்கள் நோன்பின் தியாகத்தோடுதமதுஉயிர்களையும்,உடமைகளையும் இழந்துதவித்தசோகமும் நினைத்துப்பார்க்கமுடியாதது.
இவர்களுக்காகநாம் இருகரமேந்தி இறைவனிடம் பிரார்த்திப்போம்.
30 வருடங்களாக இழந்தசமாதானத்தைநாம் பல இழப்புகளின் மத்தியில் பெற்றிருக்கின்றோம்.
30 வருடங்களாக இழந்தசமாதானத்தைநாம் பல இழப்புகளின் மத்தியில் பெற்றிருக்கின்றோம்.
அவற்றைபாதுகாப்பதுஎமதுஎல்லோருடையகடமையுமாகும். சமூகரீதியில் ஏற்படும் பிரச்சினைகள் அச்சமூகத்தைமாத்திரமல்லஅனைத்துமக்களையும் பாதிக்கச் செய்யும். எனவேசமூகங்கள் ஒற்றுமைப்படவேண்டும். பௌத்த, இந்துமக்கள் இணைந்து இப்தார் நிகழ்வுகளைஏற்படுத்துவது,பௌத்த, முஸ்லிம்கள் இணைந்துவாணிவிழாகொண்டாடுவது, இந்து, முஸ்லிம்கள் இணைந்துவெசாக் கொண்டாடுவதும் இலங்கையில் காணப்படும் அழகியமுன்மாதிரிகளாகும்.
இதனைநாம் தொடர்ந்துபாதுகாக்கவேண்டும். இந்நடைமுறைகள் எம்மிடம் இருக்கும் வரைநாம் நிம்மதியாகவாழலாம்.
பல்லினமக்கள் வாழும் நமதுநாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கும் ஏனைய இன மக்கள் முஸ்லிம்களைப் புரிந்துகொண்டும் மேலும் அவர்களோடும் நல்லுறவுஏற்படவும் பிரார்த்திப்பதோடு இனங்களுக்கிடையில் பிரிவினையைஏற்படுத்தமுனையும் தீயசக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனை இந்நன்நாளில் பிரார்த்திப்போமாக. ஆமீன்.
பல்லினமக்கள் வாழும் நமதுநாட்டில் எல்லா இன மக்களும் ஒற்றுமையோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கும் ஏனைய இன மக்கள் முஸ்லிம்களைப் புரிந்துகொண்டும் மேலும் அவர்களோடும் நல்லுறவுஏற்படவும் பிரார்த்திப்பதோடு இனங்களுக்கிடையில் பிரிவினையைஏற்படுத்தமுனையும் தீயசக்திகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் எல்லாம் வல்ல இறைவனை இந்நன்நாளில் பிரார்த்திப்போமாக. ஆமீன்.
நிறைவானதியாகங்களின் பின் வந்திருக்கும் நோன்புப் பெருநாளைநாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். அதில் இந்துக்களும்,பௌத்தர்களும் இணைந்திருப்பதைவிரும்புவோம். இஸ்லாமியசிறந்தமுன்மாதிரிகளினால்தான் நாம் மற்றையவரைவென்றெடுக்கமுடியும். அதனைநாம் பெருஉவப்புடன் மேற்கொள்வோம். ஆழகிய இலங்கைத் திருநாட்டில் அன்புரவாழ இப்பெருநாள் வழிகாட்டட்டும்.
ஏ.எல்.எம். அதாஉல்லா
தலைவர் - தேசியகாங்கிரஸ்
உள்ளுராட்சிமற்றும் மாகாணசபைகள் அமைச்சர்
.jpg)
0 comments :
Post a Comment