அண்மைக்காலமாக இலங்கையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருட்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடக்கின்றது என்று கேள்வி எழுப்பியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அவற்றின் உண்மையான தொகையை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான முறையொன்று தேவை எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு அவர் தொடாந்தும் உரையாற்றுகையில்,
அண்மைக்காலமாக ஹெரோயின் போதைப் பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவினரும் பொலிஸாரும் தெரிவிக்கின்றனர். கைப்பற்றப்படும் தொகைக்கும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் தொகைக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆகவே கைப்பற்றும் உண்மையான தொகை என்ன என்பது தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான முறையொன்று தேவையாகவுள்ளது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போதைப் பொருட்கள் அதன் பின்னர் நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளதா அல்லது பொலிஸ் பாதுகாப்பில் உள்ளதா என்பது தெரியாது. இந்தநிலையில் பொலிஸ் மற்றும் சுங்கத்தினர் கைப்பற்றும் போதைப் பொருட்கள் மீண்டும் கடத்தல்காரர்களுக்கே செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த வருடத்தில் இலங்கையில் சுமார் 1000 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எனவும் சுட்டிக்காட்டினார்.
.jpg)
0 comments :
Post a Comment