விஜய் நடிக்கும் கத்தி படத்துக்கு சிக்கல்?

விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைக்கா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கத்தி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் முன்னேற்ற முன்னணியை சேர்ந்த இருபது பேர் சவுத் இந்தியன் பிலிம் சேம்பரில் படத்துக்கு எதிராக மனு கொடுத்தனர்.

மனுவில் ‘கத்தி’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசுக்கு நெருக்கமாக உள்ளது. எனவே இந்த நிறுவனம் எடுக்கும் ‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது. தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ள ஐங்கரன் இன்டர்நேஷனலும், டைரக்டர் முருகதாசும் ஏற்கனவே மறுத்துள்ளனர். இலங்கை அரசுடன் லைக்கா நிறுவனத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், இலங்கை போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்தான் லைக்கா நிறுவனத்தை நடத்துகிறார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :