பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு சிறைச்சாலையில் நோன்பு நோற்றுவரும் முஸ்லிம் கைதிகளுக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கடந்த13-07-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று அஹ்லுஸ்ஸ{ன்னா ஜும்ஆ பள்ளிவாயலில் இயங்கிவரும் இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் இந்த இப்தார் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இங்கு பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எம். அப்துல் ஹமீத் ஷரயினால் நல்லுபதேசமும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிரி பண்டார, பிரதான சிறை காவலர் மோகன்ராஜ்,மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் தலைவர் சமூக சேவையாளர் கே.எம்.எம்.கலீல், மௌலவி அப்துல் ஹமீத் ஷரயி மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் போது குறித்த கைதிகளுக்கு இராப்போசனமும் வழங்கப்பட்டது.
தற்போது மட்டு சிறைச்சாலையிலுள்ள 110 முஸ்லிம் கைதிகளில் நோன்பு நோற்று வரும் 53 கைதிகளுக்காகவே இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment