ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தான் சமர்ப்பித்த அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை ஆகியவற்றில் உள்ள விடயங்களே இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை விவகாரம் குறித்து சமர்ப்பித்த அறிக்கைக்காக நான் முன்நிற்கின்றேன். மேலும் அது பிரசாரத்துக்கானது என்று கூறப்படும் கருத்தையும் நிராகரிக்கின்றேன். இலங்கை மீளமைக்கப்பட்டுவருகின்றது. ஆனால் மேலும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கவேண்டியுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிமடுக்கவேண்டியது அவசியமாகும்.
இவை எமக்கு முன் வைக்கப்பட்ட விடயங்களாகும். அவற்றை நாங்கள் மீண்டும் அவர்களின் முன்னால் வைத்துள்ளோம். இலங்கை அரசாங்கம் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்தி வந்தது. எனினும் அதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது. அந்தவகையில் இலங்கை விடயத்தில் சர்வதேச அவதானமும் அழுத்தமும் தேவைப்படுகின்றது.
நான் மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பித்த அறிக்கை மற்றும் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை ஆகியவற்றில் உள்ள விடயங்களே இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை யிலும் இடம்பெற்றுள்ளன
.jpg)
0 comments :
Post a Comment