மட்டக்களப்பு வங்கி சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கப்பட்டு வங்கிப் புத்தகம் கையளிக்கும் நிகழ்வு

த.நவோஜ்-

ட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் தாய் தந்தையரை இழந்த 21 வசதி குறைந்த மாணவர்களுக்கான மக்கள் வங்கி சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கப்பட்டு வங்கிப் புத்தகம் கையளிக்கும் நிகழ்வானது குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய மண்டபத்தில் எதிர்வரும் 29ம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும், திறந்த பல்கலைக் கழக விரிவுரையாளருமான கே.ஞானரெத்தினம் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம், செட்டிபாளையம் மகா வித்தியாலயம், கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், சிறப்பு அதிதியாக ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய திருவருள் ஆண்கள் சங்க தலைவரும், பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.உலககேஸ்பரம், கௌரவ அதிதிகளாக ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய திருவருள் ஆண்கள், பெண்கள் சங்க உறுப்பினர்கள், கிராமத்தின் ஏனைய ஆலயங்கள், சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர்கள் போன்றோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்விற்கான பூரண அனுசரணையினையும், ஒத்துழைப்பினையும் நல்குபவர் விரிவுரையாளர் கே.ஞானரெத்தினம் அவர்களிடம் கல்வி கற்ற பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :