அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸின் வாழ்த்துச் செய்தி.

பைஷல் எம் இஸ்மாயில்-

மழான் மாதம் 30 நாளும் நோன்பு நோற்று இரவு பகலாக தங்களை வணக்க வழிபாடுகள் மூலம் பல தியாகங்கங்களை செய்து தமது ஆன்மீக வாழ்வைப் பலப்படுத்த உதவும் ஒரு மாதகால சமய கடமைகளைத் செய்து இன்று புத்துணர்ச்சியுடன் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை மகிழ்வுற்று கொண்டாடும் உலக வாழ் முஸ்லிம்களுக்கு இந்த ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் தினத்தன்று இவ்வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

என அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான தேஷகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் விடுத்துள்ளநோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிதார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது. எனவே, சகோதரர் ஒருவருக்கு துன்பம் ஏற்படுகின்றபோது நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

எங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு நாம் செய்யவேண்டும்.
நம்மால் எதுவும் செய்ய முடியாவிட்டாலும் கூட குறைந்தது அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய முடியும். அதனையாவது நாம் அனைவரும் இந்த திருநாளில் செய்ய வேண்டும்.

இன்று உலகில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கெதிராக அட்டூழியம், அநியாயம், கொடூரம், அழிவு நாசகாறர்களால் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. காஷாவில் இஸ்ரேலிய யூதர்களால் அங்குள்ள மக்கள் அழிந்து கொண்டிருக்கிரார்கள் இந்நாளில் அந்த மக்களுக்காக துஆ செய்வோம் அவர்களின் துக்கத்தில் பங்கெடுக்க முடியாவிட்டாலும் அவர்களின் நின்மதி சந்தோஷத்துக்காக துஆ செய்வோம்.

இன்று நமது பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. நமது காணி திட்டமிட்டு பறிக்கப்படுகின்றது. நிருவாக ரீதியாகநாம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். இந்நிலைமை இப்படியே நீண்டு செல்லுமாக இருந்தால் நமது எதிர்கால சந்ததிகள்பெருஞ் சிக்கல்களை எதிர்நோக்குவர்.

எனவே, நம்மை பாதுகாத்து நமது எதிர்கால சந்ததிகளைக் கருத்தில் கொண்டு நமக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்கெதிராகநாம் அனைவரும் ஒன்று படுவோமாக!

இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிதார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :