த.நவோஜ்-
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழாவின் எட்டாம் நாள் திருவிழாவின் நகர்வலம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
ஆலய முன்றலில் வைத்து மஹோற்சவ குருக்கள் தென் ஆபிக்கா ஸ்ரீ நிவாஸ பெருமாள் தேவஸ்தான பிரதம குரு பிரதிஷ்டா கிரியா ரத்னம் பிரம்மஸ்ரீ.பா.பாலசுந்தரக் குருக்களினால் பூசைகள் இடம்பெற்ற பின்னர் நகர்வலம் ஆரம்பமானது.
ஆலயத்திலிருந்து ஆரம்பமான நகர்வலம் புதுக்குடியிருப்பு உள் வீதி, மக்கள் வங்கி வீதி, பிரதான வீதி, விபுலானந்த வீதி, புதுக்குடியிருப்பு உள் வீதி, கோராவெளி வீதி, கண்ணகிபுரம் நாகதம்பிரான் ஆலய வீதி, யூனியன் கொலணி, நரசிங்க வைரவர் வீதி, புதுக்குடியிருப்பு உள் வீதி வழியாக சென்று ஆலயத்தை சென்றடைந்தது.
இவ் நகர்வலத்தின் போது அம்பாள் சென்ற வீதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டின் முன்னால் நிறை கும்பம் வைத்து அம்பாளுக்கு பூசைகள் இடம்பெற்றது. அத்தோடு ஆலய தொண்டர் படையணியினரின் ஆட்டங்கள் இடம்பெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment