ஞான­சார தேர­ரது பேஸ்புக் கணக்கை நீக்­கி­ய­தாக பேஸ்புக் சமூக வலைத்­தளம் அறி­வித்­துள்­ளது.


வெறுப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்­துக்­களை பகிர்ந்­த­மையின் கார­ண­மாக பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேர­ரது பேஸ்புக் கணக்கை நீக்­கி­ய­தாக பேஸ்புக் சமூக வலைத்­தளம் அறி­வித்­துள்­ளது.

பேஸ்புக் சமூக வலைத்­த­ளமே பொது­பல சேனா மற்றும் அதன் செய­லா­ளரின் பிர­தான பிர­சார இயந்­தி­ர­மாக இருந்து வந்­துள்­ளது.பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தின் பல வாச­கர்கள், மேற்­படி அமைப்பு மற்றும் அதன் செய­லா­ளரின் கணக்­கு­களில் வெறுப்­பு­ணர்­வு­களை ஏற்­ப­டுத்தும் உரைகள் வெளி­யி­டப்­ப­டு­வ­தாக முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர். இதனைத் தொடர்ந்து ஞான­சார தேரர் மற்றும் பொது­பல சேனா அமைப்பின் கணக்­கு­களை நீக்க பேஸ்புக் நிறு­வனம் தீர்­மா­னித்­தது.

பல சந்­தர்ப்­பங்­களில் தனது பேஸ்புக் கணக்­கிற்கு அறி­வு­றுத்­தல்கள் வந்­த­தா­கவும் பின்னர் அது முற்­றாக நீக்­கப்­பட்­ட­தா­கவும் ஞான­சார தேரர் தெரி­வி­த்தார்.

தனது பேஸ்புக் கணக்கு மட்­டு­மல்­லாது தேசிய மற்றும் சர்­வ­தேச ரீதியில் தன்­னுடன் இணைந்து பணி­யாற்­றிய பல­ரது பேஸ்புக் கணக்­குகள் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறினார். இலங்கை மற்றும் சர்­வ­தேச ரீதியில் உள்ள முஸ்லிம் இன­வா­திகள் தனக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக பேஸ்புக் வலைத்­த­ளத்­திற்கு முறைப்­பாடு செய்த நிலையில் இவ்­வாறு தனது கணக்கு நீக்­கப்­பட்­டுள்­ள­தாக தேரர் குறிப்­பிட்டார்.

தான் எந்­த­வொரு சம­யத்­திற்கு எதி­ரா­கவோ,எந்­த­வொரு பொது­ம­க­னுக்கு எதி­ரா­கவோ கருத்து வெளி­யி­ட­வில்லை எனவும் வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் தான் கருத்து பகி­ர­வில்லை எனவும் ஞான­சார தேரர் கூறினார்.

எவ்­வா­றா­யினும் பேஸ்புக் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு தான் இவ்­வி­டயம் தொடர்பில் மின் அஞ்சல் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அதற்கான பதிலைத் தொடர்ந்து இவ்விடயம் குறித்து மேலும் ஆராயவுள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :