அஸ்ரப். ஏ. சமத்-
சமுக ஊடக வலையமைப்புக்களில் - சமுக நல்லிணக்க பங்களிப்பு” எனும் தலைப்பில் கொழும்பில் உள்ள ஊடகங்களின் தலைவர்கள் பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு ஊடக அமைச்சினால் நேற்று23ஆம் திகதி நடாத்தப்பட்டது. அத்துடன் அரச தகவல் திணைக்களத்தினால் அபிவிருத்தி பற்றிய புகைப்படக் கண்காட்சியும நடைபெற்றது.
இவ் நிகழ்வுகள் ஊடக அமைச்சர் கேகேலிய ரம்புக்கவவின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ச உரையாற்றினார்.
அமைச்சர் பசில் அங்கு தெரிவித்தாதவது -
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 10 வருட கால ஆட்சிக்காலத்தில் இனமுறுகள் சம்பவங்கள் ஒன்றுமமே இந்த நாட்டில் நடைபெறவில்லை. ஆனால் பேருவளை-அளுத்கம சம்பவம் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதனை இந்த நாட்டில் உள்ள ஊடகங்கள் உடன் செயல்பட்டிருந்தால் அதனை பாரிய பிரச்சினைகளிலிருந்தும் அழிவுகளில் இருந்து தடுத்திருக்க முடியும். இச்சம்பவத்தில் பிழையான தகவல்கள்,கற்பனைக் செய்திகள் மக்களிடம் சமுக வலையமைப்புக்கள் ஊடாக பரவியே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனை ஊடகங்கள் சம்பவங்கள் நடைபெற முனனர் சரியான முறையில் செயல்படவில்லை இங்கு சமுகம் தந்திருந்த ஊடக நிறுவன தலைவர்கள் பத்திரிகை ஆசிரியர்கள் ஊடகம் சம்பந்தமான அமைச்சினையும் குற்றம் சுமத்தினார்.
பிரச்சினைகள் வேறுபாடுகள் இருவர்களுக்கிடையில் இரு பாடசாலைகளுக்கிடையில் ஒரே மதத்தில் இரு பிரிவுகள், இரண்டு ஊர்களுக்கிடையில் நிறம், மதம், இனம், என பல பிரிவுகளுக்குள்ளேயே நடைபெறுகின்றது. தற்பொழுது ஈராக்கில் ஒரு மதத்திற்குள்ளேயே இரு பிரிவுகளுக்கிடையில் கொலைகளும் அழிவுகளும் நடைபெறுகின்றது. அதே போன்று கடந்த 2 வருடங்களுக்கு முன் பேருவளை மருதாணை என்ற பகுதியில் ஒரு மதத்திற்குள்ளே இரு பிரிவுகள் இரண்டு பள்ளிவாசல்களுக்கிடையில் நடைபெற்று இருவர் உயிரிழந்தனர்.
இதன்போது சம்பந்தப்பட்ட 100 பேர் பொலிசாரிடம ஆஜராகி இன்று சிரையில் உள்ளனர். அதுபற்றிய நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகின்றது. நான் பாடசாலைக்காழத்தில் கொழும்பில் இருந்து ஹம்பாந்தோடடைக்குச் செல்லும்போது காலிவீதியாகவே புகையிரதத்தில் செல்வேன்.
களுத்துரையில் ஒரு புகையிர நிலையம் ஒன்று உள்ளது. அந்நிலையத்தின் பெயர் இல 01வது நிலையம் என பெயர்ப்பலகை போடப்பட்டுள்ளது. இன்றும் அது உள்ளது. வெள்ளக்காரர்களது ஆட்சிக்காலத்தில் களுத்துறையில் உள்ள வஸ்கடுவ-பொதுப்பிட்டிய எனும் ஊர்களுக்கு மத்தியில் ஒரு புகையிர நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பெயர் இடும்போது இரண்டு ஊர்காரர்களும் தத்தமது ஊர்களின் பெயர்களையே வைக்க வேண்டும் என சண்டையிட்டனர். இரண்டு ஊர்களுக்கும் பெயரை வைக்காமல் இல 1வது நிலையம் என பெயரை வைத்தார்கள்.
அதே போன்று தான் நான் கற்ற நுகோகொட பாடசாலைக்கும் ஜனாதிபதியின் பாடசாலைக்கிடையில் சன்டையொன்று ஏற்பட்டது. கட்சிகள் சங்கங்கள் நிறங்களை இலட்சனைகள், வைக்கும்போது நாம் சண்டையிட்டுக்கொள்கின்றோம். இது எமது பிறப்பிலேயேயும் இவ்வாறான முறையில் பிரிந்து வாழ பழகிவிட்டோம் என அமைச்சர் பசில் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment