கவிஞர் வைரமுத்து கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற கவிஞர்கள் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் திருப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நேற்று முன்தினம் கோவையில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வைரமுத்து மீண்டும் கோவை சென்றார்.
அப்போது அவர் முதுகுவலியால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு வைத்தியர்கள் குழுவினர் வைரமுத்துவுக்கு சிகிச்சை அளித்தனர்.
முதுகுவலிக்காக முழு உடல் பரிசோதனை நடைபெற்றதாகவும், சிகிச்சைக்கு பின்னர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியா ஊடகம்
.jpg)
0 comments :
Post a Comment