நோன்பு பெருநாளை முன்னிட்டு இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கிரிக்கெட்சுற்றுப்போட்டி



எம்.ஜே.எம். சஜித்-

ராணுவத்தினர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையிலான உறவினை மேலும் வழுப்படுத்தும் நோக்கத்துடன் புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு 24வது படை பிரிவினரால் நடாத்தப்பட்ட சினேக பூர்வமான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பிரிகேடியற் எச்.கே.பி. பீரிஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி இறுதி பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் லால்பிரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.கே. பண்டார, 24வது படைப்பிரிவு பொறுப்பதிகாரி பிரிகேடியற் வன்னியாராச்சி, தென்கிழக்கு பல்கழைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்எம். முகம்மட் இஸ்மயில், பதிவாளர் ஏ.எச்.சத்தார் உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அணிக்கும் வெளி விளையாட்டுக்கழகங்களுக்குமிடையிலாக இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது.

இறுதியாக அட்டாளைச்சேனை கலைவட்டப்பிரிவும், பொத்துவில் கோல் ஸ்டார் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் 12 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்று அட்டாளைச்சேனை கலைவட்டக்கழகம் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டது.

12 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்று இராண்டாம் இடத்தை பொத்துவில் கோல் ஸ்டார் பெற்றுக்கொண்டது.

வெற்றி பெற்ற கழகங்களுக்கு பிரதம அதிதியினால் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :