கல்முனை மாநகர சபையில் இனவெறித்தாக்குதலுக்கு கண்டன பிரேரணை நிறைவேற்றம்

ஏஎம்பி-

ளுத்கம, தர்கா நகர், பேருவளை, வெலிப்பன்ன மற்றும் நாட்டில் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் மீது நிழகந்து கொண்டிருக்கும் இனவெறித் தாக்குதலைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று புதன்கிழமை முதல்வர் எம். நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போதே இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய சபை அமர்வின்போது மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்தவண்ணம் பங்கேற்றிருந்தனர்.

மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் இக்கண்டனப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்ட இக்கண்டன பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து சபையின் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்கள் மறந்து உரையாற்றினார்கள்.

இக்கண்டனத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இனவெறித்தாக்குதலை தூண்டும் பொதுபலசேனா மற்றும் சிஹல ராவய ஆகிய அமைப்புக்கள் மற்றும் இதுபோன்ற அமைப்புக்களையும் கண்டித்து உறுப்பினர்களின் உரை காணப்பட்டதுடன் சிறுபான்மை மக்களின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதம் அளிக்கப்படல் வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேரிக்கை விடுக்கப்பட்டது

இக்கண்டன தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களாலும் ஏகமனதாக  ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :