பொலீஷ் போட்டபோது நகை அறுந்ததால் வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

றந்தாங்கி: புதுக்கோட்டை மாவட் டம், அறந்தாங்கி அடுத்த துரையரசபுரம் பழைய காலனி பகுதிக்கு நேற்று வந்த வாலிபர் ஒருவர், அப்பகுதியில் உள்ளவர்களிடம் தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டுத்தருவதாக கூறினார். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் கொடுத்த வெள்ளி மெட்டியை அவர் பாலீஷ் செய்து கொடுத்தார். பின்னர், வேல்முருகனின் மனைவி கலைச்செல்வி (30) தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பாலீஷ் போட கொடுத்தார். வாலிபர் திரவம் கலந்த தண்ணீரில் தங்கச் சங்கிலியை நனைத்தார்.

ஆனால், சங்கிலி நிறம் மாறி சிறுசிறு துகள்களாக அறுந்தது. அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி கூச்சலிட்டுள்ளார். அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து மின் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர். 

ஆவுடையார்கோவில் போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கான்பூரை சேர்ந்த குந்தன்குமார்(30) என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையில் வேறு நகைகள் இல்லை. பொதுமக்கள் புகார் கொடுக்காததாலும் போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :