பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டு நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
இவ் நடமாடும் சேவை பொத்துவில் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொத்துவில் 13,14,16,17 ஆம் கிராம சேவகர் பிரிவுகளுக்கு நடாத்தப்பட்டது. இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு துரைசார்ந்த அதிகாரிகளினால் குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கான குறைபாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
;
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.வாசித், உதவித் தவிசாளர் ஏ.எம்.தாஜுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்கான், முன்னாள் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.ஏ.மர்ச10க், மற்றும் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களும், திணைக்கள தலைவர்களும், அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



0 comments :
Post a Comment