மரத்தால் விழுந்தவனை மாடேறிமிதித்த கதை!! இன்னும் ஏன் சோதனை!!

கே.சி.எம்.அஸ்ஹர்-

முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வடபுலத்தைச் சேர்ந்த 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 100,000 மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இவர்களின் அசையும் ,அசையா சொத்துக்கள் யாவும் அழிக்கப்பட்டன. சிறிய பையுடன் சில நூறு ரூபாயுடன் மட்டும் தான் புத்தளம் ,அனுராதபுரம் போன்ற பகுதிகளுக்கு வருகை தந்தனர். இப்படி வருகை தந்த மக்கள் ஏறத்தாழ 23 வருடத்தை கழித்து விட்டனர். 

இலங்கை வரலாற்றில் நீண்ட காலம் பலவந்தமாக உள்நாட்டில் வெளியேற்றப்பட்டவர்களில் நீண்ட காலம் இவ்வகை வாழ்வை வாழ்ந்த இனம் என்றால் இம்முஸ்லிம் மக்கள் மட்டுமே.இதை யாரும் மறுக்க முடியாது.

இம்மக்களின் அவல வாழ்வு தமிழ் மக்களுக்குத் தெரியும் ,சிங்கள மக்களுக்குத் தெரியும்.யுத்தம் நிறைவடைந்த பின்பு இம்மக்கள் மீளக்குடியேற பெரும் ஆவலுடன் இருந்தனர். போதிய அடிப்படை வசதி இன்மை காரணமாக இம்மக்களின் மீளக்குடியேற்ற வேகம் மந்த கதியிலே சென்று கொண்டிருந்தது. இம்மக்களில் காணிகள் அற்ற வர்களுக்கு அரச காணிகளை சட்டரீதியாக பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் நடவடிக்கைகளை எடுத்த போது தமிழர் தரப்பில் இருந்தும் சிங்கள இனவாதிகள் தரப்பில் இருந்தும் பல துவேச கருத்துக்கள் வெளியானதை அறிய முடிகிறது.

(உ-ம்)
(முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட்ட போது அமைச்சர் காடுகளை அழிப்பதாகவும், வெளி மாவட்ட முஸ்லிம்களை குடியேற்றுவதாகவும், மன்னாரில் இருந்து முல்லைத்தீவு வரையான ஒரு முஸ்லிம் இராச்சியம் உருவாக்கும் முஸ்தீபே இது எனவும் தமிழ் கூட்டமைப்பின் தீவிர சிந்தனையுடைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல மன்னார் மாவட்டத்தின் வில்பத்து வன எல்லைக்கிராமங்களான மறிச்சுக்கட்டி ,பாலைக்குழி ,கரடிக்குழி போன்ற பிரதேச பூர்வீக முஸ்லிம்களுக்கு அரச காணிகளும் ,வீடுகள் கட்டி வழங்கப்படும் போது இதை சிங்கள இனவாதக்குழு , 'மன்னாரின் மேற்குக் கரையோர கடற்கரையைக் கைப்பற்றி முஸ்லிம் இராச்சியம் அமைக்கப்படவுள்ளதாக' பல சேன குற்றம் சுமத்தியதுடன் , வில்பத்து காட்டையும் அமைச்சர் அழிக்கிறார்.வெளி மாவட்ட முஸ்லிம்களையும் குடியேற்றுகிறார்.எனவும் கூறியது.)இந்த இரண்டு இனவாதக்குழுவினரதும் அறிக்கைகளை ஆராயும் போது ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல தோன்றுகிறது.

இடம்பெயர்ந்து புத்தளம் சென்ற பின்னர் 18 வயது பூர்த்தியாகிய பிறகு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புத்தளம் பிரதேசமே வசிப்பிடமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அடையாள அட்டையுடன் தாயக பிரதேசத்திற்கு மீளக்குடியேறிச் சென்றவர்களை வெளிமாவட்டத்தவர்களாக தவறாக இனம் கண்டு கொண்ட இனவாத கிராம சேவகர்களும், பிரதேச செயலக ஊழியர்களும் உடனுக்குடன் வெளிமாவட்ட முஸ்லிம்கள் குடியேற்றப்படுகின்றனர் என்ற பொய்யான செய்தியை இனவாதக்குழுக்களுக்கு வழங்கி அவர்களை உசுப்பி விட்டுள்ளனர். 
 
வில்பத்து காட்டை அழித்துத்தானே கொண்டச்சி கஜுபாம் 5000 ஏக்கர் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு பல பெறுமதி வாய்ந்த மரங்கள் இருந்த காட்டை அழித்தே அமைக்கப்பட்டன.வெலிகந்த ,வெலிஓயா போன்ற பகுதிகளில் எல்லாம் குடியேற்றங்களுக்காக பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு உள்ளன. இவையெல்லாம் இனவாதக் கோசமிடுவோருக்கு தெரியவில்லையா? ஏன் முஸ்லிம்களுக்கு மட்டும் இரு இனமும் இணைந்து தாக்குகின்றன. 

அம்பாறை மாவட்ட வட்டமடு,அஸ்ரப் நகர்,பொத்துவில்,திருமலை புல்மோட்டை போன்ற பகுதிகளில் இனவாதிகள் பின்னால் இருந்து சாவி கொடுக்க வனபாதுகாப்புத் திணைக்களம் இவர்களின் காணிகளைக் கையகப்படுத்துகின்றன. இதை முஸ்லிம் அமைச்சர்களாலும் ஒன்று செய்ய முடியாத நிலமை உள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக சவூதி அரசால் 1200000 ரூபாய் பெறுமதியான 600 வீடுகள் பள்ளிவாயல்கள்,பாடசாலை,வைத்தியசாலை என்பனவும் நுரைச்சோலையில் அமைத்துக் கொடுக்கப்பட்டன. கரும்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியை உரிய சட்டப்பிரகாரம் பெற்றே இவை கட்டப்பட்டன. ஆனால் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட இருந்த வேளையில் இனவாதக்குழுவின் சட்ட நடவடிக்கையால் அவ்வீடுகள் வழங்கப்படாமல் காடுகள் ஆக்கிரமிக்கும் நிலையில் உள்ளன.

இதே பாணியில் வில்பத்தின் எல்லைக் கிராமங்களான மறிச்சுக்கட்டி,கரடிக்குழி,பாலைக்குழி போன்ற பிரதேச முஸ்லிம்களுக்கு கட்டார் நாட்டு தனவந்தர் தனது சொந்த நிதியில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளையும் தடுப்பதற்கு திரை மறைவில் நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.'அரபு மொழியில்' அறிவித்தல் பலகைகள் போடப்பட்டதைக்கூட ஜீரனிக்க முடியாமல் உள்ளனர்.

சட்டரீதியாக காணி அனுமதிப்பத்திரங்களைப் பெற்று அதில் கட்டப்பட்ட வீடுகளில் இருந்து இம்மக்கள் உடன் வெளியேறுமாறு வனத்திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அறிகிறோம்.இதனை இயக்குபவர் யார் என்பதை யாரும் அறியாது இருக்க முடியாது.ஆகவே,இவ்விடயத்தை மிகவும் புத்தி சாதூரியமாகக் கையாள வேண்டி உள்ளது.

 ஜனாதிபதியின் கவனத்திற்கு உடன் இதனைக் கொண்டு செல்லல் வேண்டும். 

 பாதிக்கப்பட்ட இம்மக்களின் நலனுக்காக
அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ,பாராளுமன்ற உறுப்பினர்களும் சுற்றாடல் வன அமைச்சருடன் பேசிச் சுமுகமாகத்தீர்க் வேண்டும்.

 இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்ள இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன்வரவேண்டும்.

 நல்லிதயம் படைத்த சிங்கள அரசியல் வாதிகளின் கவனத்திற்கும் ,சிங்கள மக்களின் கவனத்திற்கும் இப்பரச்சினையை சரியாக விளக்கி வைத்தல் வேண்டும்.

 நல்லிதயம் கொண்ட பௌத்த மதகுருமார்களின் கவனத்திற்கும்,நான்கு பீடங்களின் கவனத்திற்கும் இதனை கொண்டு செல்ல வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :