அல்குர்ஆன் குறித்து விவாதிக்க தயாராக இருக்கிறேன் - ஞானசார தேரர்

குர் ஆன் தொடர்பாக தான் வெளியிட்ட கருத்து தொடர்பான பிரச்சினையானது பொலிஸுக்கு செல்லும் வரை காத்திருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆன் குறித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய கிழக்கில் இலங்கையின் பௌத்த தர்மம் குறித்து திரிபுபடுத்தப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் ஒன்று என்னிடம் உள்ளது. அந்த புத்தகத்தை நாட்டு மக்களுக்கு முன்வைக்க நான் தயாராக இருக்கின்றேன்.

என்னை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கிராமம், கிராமமாக சென்று அடிப்படைவாத மதப் பிரசாரங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து நீதிமன்றத்தில் தகவல்களை வெளியிட போவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :