எம்.பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை உதுமாபுரத்தில் நெல் தொழிற்சாலை ஒன்றில் பிரதேச சபையின் அனுமதியின்றி மாட்டின் கழிவுகளை (உலும்புகள்) அரைக்கும் தொழிற்சாலை இயங்கிவருவதாக பாலமுனை பொதுமக்கள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸிலுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) கிடைத்த பொதுமக்களின் புகாருக்கமைவாக அட்டாளைச்சேனை பிரதேச தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் குறிப்பிட்ட இடத்துக்கு விஜயத்தனை மேற்கொண்டு பாலமுனை உதுமாபுரத்திலுள்ள பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட தொழிற்சாலையை பார்வையிட்டு மாட்டின் கழிவுகளை (உலும்புகள்) அரைப்பதற்கான அனுமதியினை யார் உங்களுக்கு வழங்கி வைத்தது இந்த மாட்டின் கழிவுகளை உடனடியாக இவ்விடத்திலிருந்து அகற்றவேண்டும் என்று உத்தரவினை பிரப்பித்தார்.
இந்த உத்தரவிற்கமைவாக குறிப்பிட்ட தொழிற்சாலையின் நடவடிக்கைகள் யாவும் உடனடியாக நிறுத்தப்பட்டதும் சுமார் 3 மணித்தியாலயங்களின் பின்னர் மாட்டின் கழிவுகள் யாவும் அங்கிருந்து அகற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் உடனடி நடவடிக்கையை அடுத்து பாலமுனை உதுமாபுர பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

.jpg)

0 comments :
Post a Comment