பொதுபல சேனா பிக்குகளை கைது செய்யாமைக்கு காரணம் கூறும் பொலிஸார் ..!


ஜாதிக பல சேனாவினால் கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போது வண. வட்டரெக்க விஜித்த தேரரரிடமிருந்து பொது பல சேனா அமைப்பின் அங்கத்தவர் ஒருவர் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் ஐந்து ஆவணக்கோவைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று கொம்பனித்தெரு பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட பொதுபலசேன பௌத்த பிக்குகள் பலர், மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டினுள் பலவந்தமாக புகுந்து தம்மை பயமுறுத்தி கூட்டத்தை குழப்பி தன்மையும் மிரட்டியதாக மகாவலி மகாவிகாரையை சேர்ந்த வண. விஜித தேரர் பொலிஸில் முறையிட்டிருந்தார்.

தன்மீது பிரயோகிக்கப்பட்ட நிர்பந்தம் காரணமாக தான் பீ.பீ. எஸ் மன்னிப்பு கேட்டதாக வண. வட்டரெக்க விஜித்த தேரர் கூறியுள்ளார்.

நாட்டில் சமய மற்றும் இன ஒற்றுமைக்கு பங்கம் எற்படலாம் என்ற காரணத்தினால் பௌத்த பிக்குகளை தாம் கைது செய்யவில்லை என கொம்பனித்தெரு பொலிஸார் கூறினார்.

ஆயினும் இவர்கள் தண்டனை கோவையின் கீழ் தண்டிக்கப்பட கூடிய குற்றங்களை புரிந்ததாக பொலிஸார் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :