மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் தமிழ் -சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா-படங்கள் இணைப்பு






பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நெஸ்டமோல்ட் கம்பனியின் அனுசரனையுடன் தமிழ் -சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா 01-04-2014 இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன தலைமையில் இடம்பெற்ற இப் புத்தாண்டு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு –அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருனாரத்ன,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன் சில்வா ,மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டார ஹக்மன,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன,களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்க,மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார,மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் உதயகுமார் , நெஸ்டமோல்ட் கம்பனியின் அதிகாரிகள் ,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர , மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சமன் குமார உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,மதப் பெரியார்கள்,மட்டக்களப்பு விமானப்படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இத் தமிழ் -சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்சியின் ஓர் அங்கமாக மரதன் ஓட்டம் ,சைக்கிளோட்டம் போன்ற விளையாட்டுக்கள் பிரதான விளையாட்டுக்களாக இடம்பெற்றது.

இங்கு தமிழ்-சிங்கள புத்தாண்டை பிரதிபலிக்கும் பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களுடன் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் முட்டி உடைத்தல் , ரபான்; இசை நிகழ்ச்சிகள்,பனிஸ் உண்ணுதல்,யானைக்கு கண் வைத்தல்,வளுக்கு மரம் ஏறுதல், போன்ற பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :