ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று.
மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்திற்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நிறைவான இல்லம் வளமான தாயகம் எனும் தொனிப் பொருளில் கிராம மட்டத்தில் மக்களின் தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நடாத்தப்பட்ட நான்காவது கிராமிய மக்கள் ஒன்று கூடலும் மக்கள் நடமாடும் சேவையும் தேசிய அபிவிருத்தி ;வேலைத் திட்டம்-2014 நிகழ்வு நேற்று முன்தினம் அக்கரைப்பற்று அல்-பாத்திமியா வித்தியாலயத்தில் உதவி பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான்; தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஷக்கி அவர்கள் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், அதிதிகளாக என்.எம்.நஜுமுதீன், ஏ.எல்.ஜுனைதீன். துpட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல.;ஏ.ஹஸன்,,சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர்.எம்.ஏ.இமாமுதீன், மேலதிக மாவட்ட பதிவாளர். திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள். பிரதேச சமுக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஷக்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
பின்னர் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததோடு,மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன.புகைத்தல் தடுப்பு வார செயற்றிட்டங்கள், புகைத்தல் கொடி தினத்தில் திறமை காட்டிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏம்.ஹலிமா பீவி, எம்.ஐ.இப்றாஹீம் ஆகியோர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுதல்,சமுர்த்தி சமுகப் பாதுகாப்பு பிரிவினால் மரண ஆதாரக் கொடுப்பனவுகள் , வங்கிக் கடன்கள் , நல்லிண தென்னை மரங்கள், தென்னைக்கான நோய்த் தடுப்பு மருந்து வினியோகம் , கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மருந்தூட்டப்பட்ட நுளம்பு வலை வழங்கள், இலவச இரத்தப் பரிசோதனை முதலியனவும் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment