ஆசியாவில் உலக இளைஞர் மாநாடு நடைபெறுவது ஆசிய வலயத்திற்கு கிடைக்கப்பெற்ற பெரும் வெற்றி

அகமட் எஸ். முகைடீன்- 

ஆசிய வலயத்தில் உலக இளைஞர் மாநாடு நடைபெறுவது ஆசிய வலயத்திற்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகும் - இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும

உலகில் இளைஞர் தொகை 60 வீதத்திற்கும் அதிகமானோர் வாழ்வது ஆசிய கண்டத்திலேயாகும் உலக இளைஞர் மாநாட்டை ஆசிய வலயத்தில் நிகழ்த்;துவது ஆசிய கண்டத்திற்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியாகுமென இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு தொடர்பாக இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவன தலைவர்களோடு நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு நாராஹேன்பிட்டவில் உள்ள இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேலும் கூறியதாவது.

உலகிலே முதலாவதாக சர்வதேச மட்டத்தில் இளைஞர் மாநாடு நடைபெற்றது 1936 இலேயாகும் அதன்பின்னர் அபிவிருத்தி அடையும் ஒரு நாட்டில் உலக இளைஞர்; மாநாட்டை நடாத்துவதற்காக சந்தர்ப்பம் கிடைத்தது இதுவே முதல் தடவையாகும். தற்போது உலகின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் செயற்படுவது நூற்றாண்டு அபிவிருத்தி நிதியத்தின் மூலமாகும். 15 ஆண்டுகளுக்காக உருவாக்கப்பட்ட இன் நிகழ்ச்சி நிரலில் இறுதி ஆண்டுகளே தற்பொழுது நடைபெறுகின்றது. உலக சனத் தொகையில் சுமார் அரைபகுதி இளைஞர்களேயாகும் அதனால் உலகத்தில் நடைபெறுகின்ற எந்தவிதமான நிகழ்ச்சி நிரல்களுக்கும் இளைஞர்களே தவிர்க்க முடியாததோடு செயல்படும் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களுக்கு இளைஞர்களை சேர்த்து கொள்வது சர்வதேசத்தின் தேவையேயாகும்.

நடைபெறவுள்ள இளைஞர் மாநாடானது மற்றுமொரு இளைஞர் முகாமல்ல உணவு,குடிநீர்களை பெற்றுக்கொடுத்து இளைஞர்களை மகிழ்ச்சியிலாழ்த்துவதற்கு முயற்சிக்கும் ஒரு செயலாக இதனை பார்க்க கூடாது. தற்போது இதற்காக 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பங்களிப்பை உறுதி செய்துள்ளது.25 நாடுகளில் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான அமைச்சர்கள் பங்குபெறவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் Nஐhர்ஐ; வில்லியம் ஏஸ் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இளைஞர் விவகாரங்கள் தொடர்பான செயலாளர் அகமட் அல் ஹெந்தாதி ஆகிய உயர் மட்ட அதிதிகளும் மாநாடு நடைபெறும் முழு காலகட்டத்திற்குள் தங்கவுள்ளார்கள் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம் எப்படியாக அமையவேண்டும் என்பது தொடர்பான கூற்றறிக்கையாக பெயர் வைத்துள்ளது. இளைஞர்கள் தொடர்பான இவ்வாறான அறிக்கைக்காக உலக இளைஞர் தலைவர்கள் மற்றும் இளைஞர் விவகாரங்கள் சம்பந்தமான உத்தியோகத்தர்கள் கைச்சாத்திடப்படுவது முதல் தடவை இதுவாகும்.

உலகத்தில் இருக்கும் எந்தவொரு நாட்டுக்கும் முக்கியமானது அந்நாட்டில் வாழ்கின்ற இளைஞர்களுக்கான உருவாக்கப்பட்ட இளைஞர் கொள்கையேயாகும். அவ்வாறானதொரு இளைஞர் கொள்கையே இல்லாத நாடு இலங்கையாய் இருந்தது கடந்த பெப்ரவரி மாதத்தில் நாம் அந்த குறைபாட்டையும் பூர்த்தி செய்தோம் நமது இளைஞர் கொள்கையின் பிரதான நோக்கம் திறன்கள் அபிவிருத்தி துறைக்காக ஈடுபட்டுள்ளது.நாட்டின் பிரதான கல்வி துறையில் அப்பாலிருப்பவர்களுக்கு சுயமாக ஈடுபடுவதற்கு வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தி கொடுப்பது பிரதான நோக்கமாகும்.
திறன்கள் அபிவிருத்தி செயல்பட வேண்டியது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கேயாகும்.இந்நாட்டில் வாழும் பிள்ளைகளின் எதிர்காலத்தை நமது இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு பெற்றெடுத்துள்ளது. அதற்காக அர்ப்பணிப்போடு செயற்படுவது நாட்டின் அனைவரதும் கடமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

தேசிய இளைஞர் சேவைகள் மன்நத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா , இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் தலைவர் கேரணல் தர்சன ரத்னாக்க அவர்களும் சபையில் உரையாற்றினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :