உலகில் மிக உயரமான கட்டிடம் துபாயில் - படங்கள்

உலகில் மிக உயரமான கட்டிடமாக துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடம் திகழ்கிறது.தற்போது அக்கட்டிடத்தை விட மிக உயரமான கட்டிடம் சவூதி அரேபியாவில் கிங்டம் டவர் என்ற பெயரில் உருவாகிக் கொண்டிருக்கிறது. புர்ஜ் கலீபா கட்டிடத்தின் உயரம் 828 மீட்டர்கள்.ஆனால் தற்போது சவூதியில் கிங்டம் டவர் 1000 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது.

கிங்டம் டவர் கட்டுமானப்பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கின.தரைக்கு மேலே கட்டிடம் எழுப்புவது தொடர்பான பணிகள் வருகிற ஏப்ரல் 27ந்தேதி தொடங்க இருக்கின்றன. இக்கட்டிடத்தில் 200 தளங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த கட்டிடம் 63 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கிலோமீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்த கட்டிடம் ஒரு ஹோட்டல், குடியிருப்பு கட்டிடங்கள், ஆடம்பர விடுதிகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். செங்கடல் துறைமுக நகரத்தின் வடக்கே கட்டப்படும் இந்த கிங்டம் சிட்டியானது 20 பில்லியன்
அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாகிறது.

அதில் ஒரு கட்ட பணியாக உருவாகும் கிங்டம் டவரின் கட்டுமான மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டவரை வடிவமைக்கும் பொறுப்பை அமெரிக்காவின் சிகாகோ நகரை மையமாக கொண்ட அட்ரியன் ஸ்மித் அண்ட் கார்டன் கில் ஆர்க்கிடெக்சர் நிறுவனம் ஏற்றுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :