வடமாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் அறிவித்திருந்தது.
வட மாகாண சபையில் 38 உறுப்பினர்களுள் மேலதிக 2 ஆசனங்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 30 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஈ.பி.டி. பி கட்சிக்கு 2 ஆசனங்கள் கைவசம் உள்ளன.
இதனிடையே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு ஆசனமே கிடைத்தது.
இருந்தபோதும், அந்த கட்சி சமகாலத்தில் செயற்பட்டு வரும் விதம் பிரச்சினைக்கு உரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்தார்.
கருத்து தெரிவித்த அவர், சிங்கள மக்களுடன் முறுகல் நிலை உள்ளதாக தெரிவித்து பிரிவினைவாதிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அந்த கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.

0 comments :
Post a Comment