காணாமற்போன மலேஷிய விமானத்தை தேவையென்றால் இலங்கையிலும் தேடலாம்.அதற்கான வாய்ப்புகளை வழங்க தயாராகவே உள்ளோம் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன 18-03-2014 பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது ஐ.தே. கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
காணாமற்போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையா இது?
இலங்கை ராடரில் மலேஷிய விமானம் தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளதா என ஐ.தே. கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்னவிடம் கேட்டார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே நான் மலேஷிய விமான சேவைகள் அமைச்சரல்ல.எனினும் காணாமற்போன மலேஷிய விமானத்தை தேவையென்றால் இலங்கையிலும் தேடலாம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment