வறுமையற்ற வளமான இலங்கையை கட்டியெழுப்புதல் தொனிப்பொருளில் திவிநெகும வீட்டுத் தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட மாதிரி வீட்டுத் தோட்ட அறுவடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் நெறுக்கமான சூழலில்; வாழ்கின்றனர். இந்த இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமின் வழிகாட்டலில், சாய்ந்தமருது பிரதேச செயலக விவசாய உதவிப் பணிப்பாளர் எம்.பரீடின் முயற்சியினால் குறுகிய இடப்பரப்பில் சேதனை முறை மூலம் எவ்வாறு வீட்டுத் தோட்ட செய்தல் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்குடன் இம்மாதிரி வீட்டுத் தோட்டம் செய்யப்பட்டது.
இவ்வறுவடை நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அறுவடையினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, நிதி உதவியாளர் எம்.சீ.முஹம்மட் உள்ளிட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வறுவடையில் மிளகாய், தக்காளி, கத்தரி, கீரை, நோகோள் போன்ற மரக்கறிகள் அறுவடை செய்யப்பட்டதுடன் உத்தியோகத்தர்களுக்கு விற்பனையும் செய்யப்பட்டது.
இதன்போது காரியாலய உத்தியோகத்தர்களுக்கு மரக்கறி கன்றுகளும், பொலித்தீன் பைகளும் வழங்கப்பட்டன.
.jpg)

0 comments :
Post a Comment