விஷால் தற்போது 'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தை முடிக்கும் தருவாயில் இருக்கிறார்.
இந்த படத்தில் லட்சுமி மேனன் ஹீரோயினியாக நடிக்கிறார். இந்த படத்தை விஷாலும், யூடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் இந்த படம் குறித்து ஜாலியாக பேசினார் விஷால். அப்போது நீங்கள் இயக்குனராக மாறினால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹீரோ யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த விஷால்.
'நான் இயக்குனராக மாறினால் என்னுடைய முதல் சாய்ஸ் விஜய்தான். நான் எந்த கதையை தேர்ந்தெடுத்தாலும், அதில் ஹீரோவாக நடிக்க பொருத்தமானவராக விஜய்தான் என் கண்முன் நிற்பார்.
ஒருவேளை விஜய் என் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்ட்டால் என்னுடைய அடுத்த சாய்ஸ் விஜய் சேதுபதிதான்.
தற்போதைய இளையதலைமுறை நடிகர்களில் எந்த கதைக்கு பொருத்தமானவராக இருக்கும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். ஹீரோயினை பொருத்தவரை என்னுடைய முதல் சாய்ஸ் ஸ்ருதிஹாசன் என விஷால் கூறினார்
பாண்டிய நாடு படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய விஷால், கூடிய விரைவில் இயக்குனராக விரைவில் விஜய் அல்லது விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment