தேர்தல் முடிந்ததும் ஹக்கீம் அலரிமாளிகையில் பிரியாணி சாப்பிடுவார் - மௌலவி முபாறக்



DC-ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எந்தக் காலத்திலாவது சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்ததாக ஒன்றைக்காட்ட முடியுமா? என முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சித் தலைவர் மௌலவி முபாறக் கேள்வி எழுப்பினார்.

கொழும்பு மாளிகாவத்தையில்; நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் முஜிபுர்ரஹ்மானை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் எந்தப் பிரச்சினைகளையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையாக்கவில்லை என்பதை நாமறிவோம். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்திலும் அரசுக்கும் ஹக்கீமுக்கும் முறுகல் என்பது போல் காட்டப்பட்டது. தேர்தலின் பின் தீர்க்கமான முடிவை மேற்கொள்வோம் என அன்றும் இதே போல் ஹக்கீம் கூறினார். அதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை அரசாங்கம் இழக்கப்போகிறது என்றே கிழக்கு மக்கள் நம்பினர்.

ஹக்கீம் இன்னமும் அமைச்சுப் பதவியில் ஒட்டியிருப்பதால் இவர்கள் அரசுக்கே முஸ்லிம்களை அடகு வைப்பார்கள் என கூறினோம். தேர்தல் முடிந்த பின் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அலறி மாளிகையில் பிரியாணி சாப்பிட்டார்கள்.

புலிகளுக்கெதிராக இந்த அரசு போராடிய போது புலிகளுக்கு சார்பாக நின்றார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை இந்த அரசு உடைக்கும் போது அரசுக்கு ஆதரவாளர்களாக நிற்கிறார்கள். தேர்தல் வந்தால் அரசை சாடுவார்கள். தேர்தல் முடிந்தால் இந்த அரசாங்கமே நம்மை பாதுகாக்கும்; என கூறுவார்கள். மு. காவின் இத்தகைய நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் இன்று வெட்கிப்போயுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :