சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திரிய பியச திட்டத்தின் கீழ் வீடு கையளிப்பு - படங்கள்






-எம்.வை.அமீர்-
ம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தின் மூலம் திரிய பியச திட்டத்தின் கீழ் வீடு கையளிப்பு கையளிக்கப்பட்டது.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கொடி விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக்கொண்டு சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஒவ்வொரும் 160000.00 ரூபாய் பொறுமதியான 12வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தின் மூலம் திரிய பியச திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றை இன்று சம்மாந்துறை விளினயடி 01,02,03 பிரதேசத்தை உள்ளடக்கி நடைபெற்ற கிராமிய மக்கள் ஒன்றுகூடல் மற்றும் நடமாடும் சேவை நிகழ்வைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌசாட் அவர்களினால் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன் உட்பட சம்மாந்துறை பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :