கிராம மக்கள் ஒன்றுகூடல் மற்றும் நடமாடும் சேவை - படங்கள், வீடியோ இணைப்பு






எம்.வை.அமீர்-
ன்று (2014-03-20) சம்மாந்துறை விளினயடி 01,02,03 பிரதேசத்தை உள்ளடக்கி கிராமிய மக்கள் ஒன்றுகூடல் மற்றும் நடமாடும் சேவை நிகழ்வு விளினயடி03 கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌசாட் கலந்து கொண்டார். இங்கு விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்துகொண்ட அதேவேளை அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.காலிலுல்ரஹ்மான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் பீ.எம்.எம்.முகைடீன் போன்றோருடன் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.ஏ.லத்தீப்,கணக்காளர் ஏ.எல்.மஹ்ரூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்ஸா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், கிராம உத்தியோகத்தர்களான எம்.எச்.எம்.மிஸ்பாஹுல் ஹுதா, அஸ்ரப், ஐ.எல்.எம்.இக்பால் போன்றோருடன் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர்கள் செயலாளர்கள் போலீஸ் அதிகாரிகள் உட்பட பெரும் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

பிரதம அதிதி மற்றும் பிரதேச செயலாலளர் ஆகியோர் ஆற்றிய உரையின் வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


பிரதம அதிதி ஏ.எம்.எம்.நௌசாட்
பிரதேச செயலாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :