அம்பாரை வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியுலன்ஸ்கள் கையளிப்பு - பிரதம அதிதியாக மன்சூர்



ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் -
ம்பாரைப் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது.

அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சேனக தலாகல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம்,மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்டநிதி உதவியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்ட புதிய அன்பியுலன்ஸ் வண்டிகளில் ஒரு தொகுதியினையே இன்று அமைச்சர் மன்சூர் தெஹியத்தகண்டிய போதனா வைத்தியசாலை, மகாஓயா போதனா வைத்தியசாலை, பதியத்தலாவ மாவட்ட வைத்தியசாலை போன்றவற்றிற்கு வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் அம்பாரைப் பிராந்திய திட்டமிடல் சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.எம்.திலக் ராஜபக்ஷ, பதியத்தலாவ மாவட்ட வைத்தியதிகாரி பி.கே.ரத்னசிறி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.ஏ.எல்.சஃபீர், பொது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.எம்.பஸீர் உள்ளிட்ட வைத்தியர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உயரதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ' அரசாங்கமானது வருடத்திற்கு வருடம் சுகாதாரத் துறைக்குப் பெருந் தொகைப் பணத்தைச் செலவிட்டு வருகின்றது. அரசின் பெருந் தொகைப் பணத்தினையும்,வேறு இதர உதவிகளையும் கொண்டு கிழக்கு மாகாணத்தின் சுகாதார சேவையினை முடிந்தவரை முன்னெடுத்து வருகின்றோம். இன,மத பேதம் பாராது எல்லாச் சமூகத்தினருக்குமாக எனது சேவை தொடரும் என்ற உறுதியோடு, இன்று வழங்கப்படும் அம்பியுலன்ஸ் வண்டிகளை நீண்ட காலத்திற்குப் பயன்படுத்தி, சுகாதாரத்துறைக்கு உச்சப்பயன் கிடைப்பதற்கு சாரதிகளும், வைத்தியர்களும் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்' எனத் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :