அஷ்ரப் ஏ சமத்-
இந்த நாட்டில் உள்ள பௌத்தர்கள் எல்லாம் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் ஒன்று கூடுகின்றனர், வடக்கு கிழக்கும் வாழும் தமிழர்களெல்லாம் தமிழர் தேசிய முன்ணனியின் ஒன்று கூடுகின்றனர், முஸ்லீம்கள் எல்லாம் முஸ்லீம் காங்கிரசில் ஒன்று கூடுகின்றனர். ஏன் இந்த நாட்டில் உள்ள இந்திய வம்சாவலி மக்கள் எல்லாம் இந்த சேவல் சின்னம் கொண்ட இலங்கை தொழிலாளர் கங்கிரசில் ஒன்று சேரக்கூடாது ? என நான் கேட்க விரும்புகின்றேன். என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் உரையாற்றினார்.
நேற்று இரவு கொழும்பு செட்டியார் தெருவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடாத்திய இறுதிக் கூட்டத்திலேயே அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் உரையாற்றினார்.
நாம் ஒருபோதும் எதிர்கட்சியில் இ
ருக்கமுடியாது. ஆட்சியில் இருக்கின்றவறோட இணைந்து தான் தமது பிரச்சினைகளை அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ளமுடியும் கடந்த 10 வருட காலமாக கொழும்பில் சேவல் சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் கேட்கவில்லை இப்ப கொழும்பில் வாழ்கின்ற தோட்டத்தொழிலாளர் காங்கிரசின் மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்கின்றார்கள். யாணை செத்துப்போச்சி அதில் இருக்கிற தமிழ் வேட்பாளருக்கோ அல்லது வேறு கட்சிக்கோ நாம் வாக்களிச்சி எனத்தான் கண்ட பயன்.
ஆகவே நாம் இந்த நாட்டில் தொடர்ந்தும் நாடோடியாக வாழாமல் நமக்கென்று ஒரு கிராமம் வீடு வாசல் அமைத்து வாழ்வதற்கு இந்த சேவல் சின்னத்தின்;கீழ் கொழும்பு வாழ் தமிழ்;மக்கள் ஒன்று திரளும்படி அமைச்சர் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதியமைச்சர் முததுசிவலிங்கம் உட்பட சகல அரசியல் பிரநிதிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment