சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு



சி
ம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். காதலை முறித்துக் கொண்டதாகவும் பகிரங்கமாக அறிவித்தனர்.

பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் முறிந்து போய் உள்ளது. இந்த நிலையில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாராவை பாண்டியராஜ் ஜோடியாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் இருவரும் சிரித்து பேசுவது போன்ற படங்கள் வெளியாயின. நட்பை புதுப்பித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில்தான் சிம்பு–நயன்தாரா ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவி உள்ளது. சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது என்றும், நயன்தாராவுக்கு தாலி கட்டுவது போன்ற திருமண படத்தை மே 1–ந் தேதி சிம்பு வெளியிடப் போகிறார் என்றும் தகவல் பரவி உள்ளது.

ஆனால் பட விளம்பரத்துக்காக இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாக இன்னொரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே நயன்தாராவும், ஆர்யாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வது போன்ற படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர். பிறகு அது ‘ராஜா ராணி’ பட விளம்பரத்துக்காக செய்யப்பட்டது என தெரிய வந்தது.

அது போல் சிம்பு, நயன்தாரா திருமணமும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விளம்பரபடுத்துவதற்காகவே நடந்துள்ளது என்று கூறுகின்றனர். திருமண படங்களை வெளியிடும் போது உண்மை தெரிய வரும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :