தம்புள்ள பள்ளிவாயல் மீதான குண்டுத்தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது



ம்புள்ள பள்ளிவாயல் மீதான குண்டுத்தாக்குதலை முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சி வன்மையாக கணடித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் 2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாயல் தாக்குதலுடனேயே ஆரம்பமானது. அதில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாவிடில் மேலும் விளைவுகளை முஸ்லிம்கள் எதிர் நோக்க வேண்டி வரும் என்பதை நாம் அரசுக்கு ஆதரவானவர்களாக அன்று இருந்த போது அரசிடம் எடுத்துக்கூறினோம். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்ற எமது தூர நோக்கு எச்சரிக்கையை அரசு புறந்தள்ளியதால் இதனை கண்டிக்குமுகமாக நாம் அரச ஆதரவிலிருந்து விலகினோம். அதன் பின் இன்று வரை பல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டன.

தம்புள்ள பள்ளிவாயலை அந்த இடத்திலிருந்து தூக்குவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் எம்மைப்போன்ற எதிர் தரப்பு அரசியல்வாதிகள் இதற்கெதிராக குரல் எழுப்பியதால் அது கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும் பள்ளிவாயலை சூழவுள்ள மக்களை வெளியேற்றுவதன் மூலம் பள்ளிவாயல் தனிமைப்படுத்தப்பட்டு பாழ் படுத்தப்பட்டு அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் பகிரங்கமாக்கப்பட்டதால் தற்போது குண்டுத்தாக்குதல் மூலம் பள்ளிவாயலை சேதப்படுத்தி அதனை திருத்த முயற்சிக்கும் போது சட்டத்தை பயன்படுத்தி தடுக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காண்கிறோம்.

இந்த நிலையில்தான் நாட்டில் அமைதி நிலவுகின்றது என அரசுக்கு ஜால்ரா போடும் முஸ்லிம் அமைச்சர்களும், சில இஸ்லாமிய அமைப்புக்களும் பேரணி நடத்தி கொடி பிடிக்கின்றன. பல பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டு ஹலால் முறை ஒழிக்கப்பட்டு தற்போது தம்புள்ள பள்ளிக்கு குண்டுத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்ட நாட்டை அமைதியான நாடு என புத்தி பேதலித்தவனை தவிர வேறு யாரும் கூற மாட்டான்.

ஆகவே தம்புள்ள பள்ளிவாயல் மீதான தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இது பற்றிய நீதியான விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இது பற்றிய விசாரணையை நீதியாக மேற்கொள்ள அரசுக்கு முட்டுக்கொடுக்கும் ஹக்கீம், ரிசாத் ஆகியோரின் கட்சிகள் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :