அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அபிவிருத்திக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது!



எமது செய்தியாளர்-

ட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின்( தேசிய பாடசாலை) பாடசாலை அபிவிருத்திக் குழுவிற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிபர் மௌலவி வீ.ரி.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

பாடசாலை அபிவிருத்திக் குழுவி்ற்கான உறுப்பினர்களாக 19 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெற்றோர்கள் சார்பாகவும், பழைய மாணவர்கள் சார்பாகவும், பாடசாலை ஆசிரியர்கள் சார்பாகவும், வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, பெற்றோர்கள் சார்பில் ஹம்ஸா சனூஸ், புலணாய்வு உத்தியோகத்தர் எம்.எம்.கால்டீன், சட்டத்தரணி எஸ்.எல். அப்துல் ரசித், எம்.எஸ்.ஜெளபர், ஏ.ஜி.முபாரக், ஏ.எல்.மக்கீன், ஐ.எல்.பஜிறுதீன் ஆகியோரும்

ஆசிரியர்கள் சார்பில் பிரதி அதிபர் ஏ.எல்.அன்வர், உதவி அதிபர்கள் எஸ்.எல்.எம்.நஸீர், ஏ.எல்.அப்துல் பத்தாஹ் மற்றும் எம்.எல்.ஜாபீர், எம்.ரி.சியாத்,எம்.எப்.நழீம், ஏ.அஸ்ரப், பி.மதியழகன் ஆகியோரும்

பழைய மாணவர்கள் சார்பில் ஓய்வு பெற்ற அதிபர் ஏ.சி.சைபுதீன், கே.எல்.அனீஸ் ஆகியோரும் வலயக்கல்வி அலுவலகத்தின் சார்பில் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவராக அதிபர் மௌலவி வீ.ரி.எம்.ஹனீபா செயல்படுவார்.

அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழு மிக நேர்மையாகவும், வெளிப்படத்தன்மையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பாடசாலையின் அதிபர் மௌலவி வீ.ரி.எம்.ஹனீபா பாடசாலையின் முன்னேற்றத்திற்காக நேர்மையோடு மிக அக்கரையுடன் செயல்பட்டு வருகின்றார். அண்மைக்காலமாக இப்பாடசாலையின் கல்விப் பெறுபேறுகள் மிகச்சிறந்த மட்டத்தில் இருப்பது சிறப்பம்சமாகும்.

குறிப்பாக ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தி்ல் கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்த இரண்டாவது பாடசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்ல கடந்த உயர்தரப் பரீட்சையில் பொறியியல் துறைக்கு இப்பாடசாலை மாணவர் ஒருவர் அம்பாரை மாவட்டத்தி்ல் இரண்டாவது இடத்தைப் பெற்று அட்டாளைச்சேனை மண்ணுக்கு பெருமை சேர்த்ததும் விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :