இரசாயன நச்சுகளற்ற உணவுப் பயன்பாட்டோடு, சுகாதார பழக்க வழக்கங்களை கடைப் பிடித்து முறையான உடற் பயிற்சிகளுடன் கூடிய சமய அடிப்படையிலான வாழ்க்கை முறையை மேற் கொள்வதன் முலம் புற்று நோயிலிருந்து பாதுகாப்புப் பெற்று சுகதேகியாக நீண்ட நாள் வாழலாம் என்பதோடு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து முறையான சிகிச்சை வழங்குவதன் முலம் விரைவில் குணப்படுத்த முடியும் என்றும் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதய சூரிய தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அனுசரனையுடன் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி சங்கமும் அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியும் இணைந்து முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் நடாத்திய புற்று நோய் மற்றும் தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு மேற்படி நோய்களும் பாதுகாப்பு முறைகளும் பற்றி விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
.
அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஏ.ஜி.அன்வர்;; தலைமையில் நாட்டில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் புற்று நோய் சம்பந்தமாக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் ஆதார வைத்தியசாலை நிருவாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நிஸாம், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் என்.எம்.நஜுமுதீன், கனிஷ்ட கல்லூரியின் ஆசிரிய, ஆசிரியைகள், அபிவிருத்திச் சங்க பொருளாளர், பெற்றோர்கள், பிரதேசத்திலுள்ள குடும்பப் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதய சூரிய தொடர்நது விளக்கமளிக்கையில்: மாறி வரும் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், சுகாதார நடைமுறைகளை ஓழுங்காகப் பின்பற்றாமை. உடற்பயிற்சியின்மை, பாஸ்புட் உணவுகளை அதிகமாக உண்ணுதல், சுகாதார முறைப்படி தயார் செய்யாத உணவுகளை வாங்கி உண்ணுதல், செயற்கை சுவையூட்டிகள், நிறமுட்டிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணுதல், இயந்திரமயமான வாழ்க்கை முறைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டமை, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமை, நோய்கள் ஏற்படுகின்றபோது உரிய நேரத்தில் மருத்துவம் செய்யத் தவறுதல் முதலிய காரணங்களால் பயங்கர புற்று நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு உட்படுகின்றார்கள்.
என்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவினை உண்பதன் முலம் நீண்ட நாட்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பதோடு பெண்கள் தங்களைப் அதிகமாகப் பாதிக்கும் கருப்பைவாய் புற்று நோய், மார்பகப் புற்று நோய், கழுத்தில் ஏற்படும் தைரோயிட் புற்று நோய் மற்றும் வெற்றிலை சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுகின்ற வாய்ப் புற்று நோய் சம்பந்தமாகவும் ம் புகைப்பவர்களுக்கும், புகைப்பவருக்குப் பக்கத்தில் நின்று அந்தப் பகையை சுவாசிப்பவர்களுக்கும் ஏற்படுகின்ற சுவாசப்பை புற்று நோய், குறை மாதப் பிரசவம், அங்கவீனமான குழந்தை பிறத்தல், கருச் சிதைவு முதலிய விடயங்கள் பற்றியும் போதிய விளக்கங்களை வழங்கியதோடு, நோய்பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்றும், அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளைச் செய்து நோய் அரும்பியுள்ளதா எனப் பார்ப்பதோடு; உரிய நேரத்தில் சிகிச்சைகளை மேற் கொள்வதன் முலமும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.;--
0 comments :
Post a Comment