திவிநெகும வாழ்வாதார வேலைத் திட்டம் சம்பந்தமாக அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு (திவிநெகும திணைக்கள உத்தியோகத்தர்கள்) விழிப்பூட்டல் செயலமர்வு ஒன்று அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவு கூட்ட மண்டபத்தில் நேற்று (24.03.2014) திங்கட்கிழமை நடைபெற்றது.
அக்கரைப்;பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் இணைப்புச் செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.எம்.பஹீஜ் கலந்து கொண்டதோடு, அம்பாரை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.ஏ.அலியார், அக்கரைப்பற்று சமுர்த்தி பிரிவு தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.இமாமுதீன், சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.எம்.சலீம், அக்கரைப்பற்று –கிழக்கு மற்றும் மேற்கு பிரிவுகளுக்கான சமுர்த்தி வலய முகாமையாளர்களான எம்.எல்.ஜாபீர், எம்.சுரேஷ்கான், திட்ட முகாமையாளர் எம்.ரி.மசூர்,அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க தேசிய உப தலைவரும், அம்பாரை மாவட்ட தலைவருமான ஐ.எச்.ஏ.வஹாப் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தமது வாழ்
வாதாரத்தை அபிவிருத்தி செய்து அவர்களின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சுய தொழில் வாய்ப்பில் ஈடுபடத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல் முதலிய விடயங்கள் பற்றி பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அம்பாரை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.ஏ.அலியார், சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.எம்.சலீம் முதலியோர் தேவையான விளக்கங்களை வழங்கினார்கள்.
அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் இணைப்புச் செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.எம்.பஹீஜ் சிறப்புரை நிகழ்த்தியதோடு, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து அவர்களின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக ஆற்றி வரும் சேவையை பாராட்டினார்.
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment