காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாயல் திறப்பு விழா-படங்கள்






பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலும் 1990 ஆம் ஆண்டு முதல் தஃவா வழிகாட்டல் கல்வி பயிற்றுவித்தல் மற்றும் மனிதாபிமான சேவைகள் சகவாழ்வுக்கான பிரிவுகளுடன் பல்வேறு பணிகளை அல்லாஹ்வின் பேருதவியினால் மேற்கொண்டுவரும் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய வளாகத்தில் 08-12-1997 முதல் செயற்பட்டு வந்து தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள மஸ்ஜிதுல் இர்ஷாத் பள்ளிவாயல் திறப்பு விழா 21-03-2014 இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை பீடத்தின்  பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் எம் அலியார் றியாதி தலைமையில் இடம்பெற்ற இப் பள்ளிவாயல் திறப்பு விழாவில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள்,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் பிரதிநிதிகள்,உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு பள்ளிவாயல்களின் முக்கியத்துவம் தொடர்பில் காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கவிமணி.எம்.எச்.எம்.புகாரி பலாஹியினால் விஷேட மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :