கொழும்பில் நடந்த ஆளும் தரப்புக் கூட்டமொன்றில் பௌசி குடும்பம் எந்த நாளும் இந்த கட்சியுடன் இருந்து அரசியல் செய்கின்றது.எனவே எங்களுக்கு நவ்சாரை இந்தத் தேர்தலில் மறந்தவிட்டு அரசியல் செய்ய முடியாது.
இந்த மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் கட்டாயம் உங்கள் விருப்பு வாக்குகளில் ஒன்றை நவ்சார் பௌசிக்கு வழங்க வேண்டும். அவருக்கு வாக்களிப்பது எனது தந்தை மஹிந்த ராஜபக்சாவுக்கு வாக்களிப்பதற்கு சமமான ஒரு பணியாக நான் கருதுகின்றேன். இப்படி ஒரு சான்றிதழை நவ்சாருக்கு வழங்கி இருக்கின்றார் நாமல் ராஜபக்ச.
அண்மையில் முஸ்லிம் பிரமுகர்களை கொழும்பில் சந்தித்த வைபவமொன்றிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நவ்சார் நற்குனங்கள் பற்றிப் பாராட்டிப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் இந்த முறை கொழும்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம் வேட்பாளர்கள் களமிறக்கப்ட்டிருப்பது முஸ்லிம் பிரதிநித்துவத்திற்கு பெரும் ஆபத்தாக இருக்கின்றது.
.jpg)
0 comments :
Post a Comment