நல்ல சிந்தனைகளே நல்ல நடத்தைகளாகி நல்ல நடத்தைகள் நல்ல பழக்க வழக்கங்ககளாகி நல்ல பண்புள்ளவர்களை உருவாக்குகின்றது. அந்த வகையில் மாசடைந்து வரும் சுற்றுச் சூழலை சீர் செய்யும் மனித நேயமுள்ளவர்களை உருவாக்கி மாசடைந்த சூழழை தூய்மையாக்கி நல்ல காற்றையும் மனித வாழ்வுக்கு உகந்த சுற்றுச் சூழலை உருவாக்குவதற்கும், வேகமாக வெப்பமடைந்து வரும் பூமியினைப் பாதுகாக்கவும், பசுமைப் புரட்சியை உருவாக்கவும் அதிகமாக மரங்களை நட்டுப் பாதுகாப்போம் என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும், அம்பாரை மாவட்டப் பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் அனுசரணையுடன் மறுமலர்ச்சி அமைப்பினால் அக்கரைப்பற்று ஸஹ்றா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகையின் முலம் பசுமைப் புரட்சி என்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மரங்களை நட்டு பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவோம் என்ற தொனிப் பொருளில் சூழலையும், சூழலைப் பாதுகாக்கும் மரங்களையும் நேசிக்கும் மனித நேயமுள்ளவர்களை உருவாக்குவனை நோக்காகக் கொண்டு அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலய அதிபர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான் தலைமையில் நடாத்தப்பட்ட இவ் வைபவத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இம்போட் மிரர் பணிப்பாளருமான எஸ்.முனாஸ் அவர்களிடம் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தவிசாளர் பி.பரமசிங்கம் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.லாபிர், சமாதானஉதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.தாவூத் பாடசாலை அதிபர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், மறுமலர்ச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஏ.றமீஸ், கள ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.எஸ்.றிஸ்லி ஸம்ஸாட், இணையத்தின் திட்ட உதவியாளர் பி.ஹஸ்ஸான், அல்-ஜெஸீரா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ், களம் இணையத் தள பணிப்பாளர்எஸ்.எம்.அருஸ் ஓய்வு பெற்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர், ஆகியோர் கலந்து கொண்டனர். தேவையான மரக்கன்றுகளையும், கன்றுகளைப் பாதுகாப்பதற்கான இரும்புக் கம்பியிலான கூடுகளையும் அரச சார்பற்ற இணையம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.






0 comments :
Post a Comment